ஜாதக பலன்களை எப்படி பார்ப்பது தெரியுமா?

நம்மில் பெரும்பாலானோருக்கு தான் பிறந்த நாள் மற்றும் நேரத்தை நம் பெற்றோர் சரியாக பதிவு செய்து வைத்து அதற்கான ஜாதகத்தை தயார் செய்திருப்பார்.

அதன் மூலம் நம் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதையும், திருமணத்தின் போதும் ஜாதகத்தை பயன்படுத்துவது வழக்கம்.

ஜாதகம் இல்லாவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

சிலர் தான் பிறந்த தேதி, நேரத்தை அவர்களின் பெற்றோர் சரியாக குறித்து வைக்காவிட்டால், அவருக்கான ஜாதகம் தயார் செய்வது மிகவும் கடினம்.

இப்படி பிறந்த திகதி, நேரம் தெரியாமல், ஜாதகம் இல்லாதவர்கள் கை ரேகை வைத்து தங்களின் விதியை அறிந்துகொள்ளலாம்.

  • கை வடிவ அம்சங்கள்
  • விரல்களின் வகைகள்
  • கைகளின் வகைகள்
  • உள்ளங்கையில் உள்ள கிரக மேடுகள்
  • உள்ளங்கையில் உள்ள ரேகைகள்
  • உள்ளங்கையில் உள்ள குறியீடுகள்
  • ஆகியவை கை ரேகை பார்ப்பதில் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

ஒருவரின் வாழ்க்கை சிறப்பாக அமைய, ஐஸ்வரியனங்களோடு வாழ அவரின் கையின் கிரக மேடுகள் அழகாக இருக்க வேண்டும். சூரிய மேடு, சந்திர மேடு, குரு மேடு, புதன் மேடு என பல ரேகை மேடுகள் உள்ளன.

அதே போல் கைகள் சதுரக் கை, சங்கு கை, வட்டக் கை என மூன்று வகை இருக்கின்றது. அந்த கையில் உள்ள மேடுகள் எல்லாம் அழகாக அமைப்பாக அமைந்து இருக்கும் நபர் மிகுந்த அதிர்ஷ்டசாலியாக பார்க்கப்படுகின்றார்.

7 ரேகைகளின் தலையாய ரேகையின் பெயர் தலைவிதி ரேகை என்று பெயர். அதற்கு மறு பெயர் சனி ரேகை என்று பெயர். கையின் கீழிருந்து மேலாக நடுவிரலை நோக்கி செல்லும் ஒரு ரேகை தான் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றது.

சூரிய ரேகை சரியாக அமைந்து, விதி ரேகை, செல்வாக்கு ரேகை சரியாக சேரும் பட்சத்தில் அவர்கள் செல்வந்தராவதோடு, பிரபலமானவர்களாகவும் ஆக வாய்ப்புண்டு.

அதே போல் தலை ரேகை, இதய ரேகை, ஆயுள் ரேகை ஆகியவை வைத்து ஒருவரின் உடல் ஆரோக்கியம் கணிக்கலாம்.

இப்படி ஜாதகம் இல்லாதவர்கள் கை ரேகை வைத்தும் கணித்துக் கொள்ளலாம். அல்லது சில இடங்களில் அகத்தியர் நாடி ஜோதிடர் மூலம் நம் கட்டை விரல் கை ரேகை வைத்தால், அவர்கள் நம் பிறந்த தேதி, பெயர் முதல் கொண்டு சரியாக கணித்து சொல்கின்றனர்.

Sharing is caring!