டயர் மாதிரி இருக்கும் தொப்பையை மிக வேகமாக 3 நாட்களில் கரைக்கும் தேன்!

தேன் மற்றும் பச்சையான பூண்டை வைத்து எப்படி உடல் எடையைக் குறைக்கலாம். இது சித்த மருத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள மிக எளிய வைத்திய முறை ஆகும்.

இபப்டி சாப்பிடுவது வெறுமனே உடல் எடையைக் குறைப்பதோடு வயிற்றில் தேங்குகின்ற கொழுப்பை தேங்கவிடாமல் தடுக்கும். வாயுத்தொல்லை, வயிற்று உப்பசம் ஆகியவற்றையும் தீர்க்கும்.

அதனால் குண்டானவர்கள் மட்டுமல்ல எல்லோருமேஇதை சாப்பிடலாம். இதை எப்படி சாப்பிட வேண்டும், எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

எடை குறைப்பு

எடையைக் குறைக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் நீங்கள் எவ்வளவு சீக்கிரம் நினைக்கிறீர்களோ அவ்வளவு வேகமாகக் குறைந்தால் எல்லோருக்கும் மகிழ்ச்சி தானே!. உண்மை என்ன தெரியுமா? எடையைக் குறைப்பது என்பது அவ்வளவு சாதாரண விஷயமெல்லாம் கிடையாது. ஆனால் என்ன சில டயட் (உணவு ரீதியான) சார்ந்த மாற்றங்களை மேற்கொள்வதன் மூலம் அதற்கான முயற்சியை துரிதப்படுத்தலாம்.

தினசரி உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவுப் பழக்கம், தொடர்ந்து வெந்நீர் மட்டும் குடிப்பது இதுபோன்ற பழக்க வழக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்தீர்கள் என்றால் உடல் எடை குறைவதைத் துரிதப்படுத்த முடியும்.

இப்படி நிறைய சிரமங்களுக்குப் பிறகு தான் எடையைக் குறைக்க முடியும். ஆனால் இந்த கட்டுரையில் ஓரு மிகச்சிறந்த பலனைத் தரக்கூடிய வீட்டு வைத்திய முறையைத் தான் பார்க்கப் போகிறோம்.

பூண்டும் தேனும்

பச்சை பூண்டும் தேனும் சேர்த்து சாப்பிடுவது என்பது அத்தனை சுவையான விஷயம் இல்லை தான். என்றாலும் கூட, இது உடல் எடையை வேகமாகக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. அதோடு மட்டுமல்லாது இது உங்களுடைய ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக்கூடியது.

எப்படி நடக்கும்?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் பச்சையாக பூண்டை தட்டி அதை தேனுடன் கலந்து சாப்பிட்டு சாப்பிட்டு வந்தால் உங்களுடைய ஜீரண மண்டலம் துரிதமாக வேலை செய்யும். அதோடு உடலில் உள்ள கழிவுகள் அனைத்தும் வெளியேற்றப்படும். பூண்டும் தேனும் மிக ஆரோக்கியம் நிறைந்த பொருள். இவற்றை நாம் எந்த உணவோடு வேண்டுமானாலும் சேர்த்து சாப்பிட முடியும். அப்படிப்பட்ட இந்த இரண்டு பொருள்களையும் சேர்த்து சாப்பிடுவதால் மிதமிஞ்சிய ஆரோக்கிய விஷயங்கள் நடக்கும்.

எப்படி சாப்பிட வேண்டும்?

நான்கு பல் பூண்டை எடுத்து சிறு சிறு துண்டுகளாக, துருவியோ அல்லது நசுக்கியோ எடுத்துக் கொள்ளுங்கள். அதில் 1 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு பத்து நிமிடங்கள் வரை ஊற விடவும்.

தேன் பூண்டுக்குள் நன்கு இறங்க வேண்டும். அல்லது இதை இரவிலே கூட செய்து வைத்துக் கொள்ளலாம். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இதை சாப்பிடலாம். தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறைவதை உங்களால் உணர முடியும்.

Sharing is caring!