டெங்கு காய்ச்சலை தடுக்க எளிய வீட்டு மருத்துவம்!

டெங்கு உண்மையில் வைரஸ் காய்ச்சல் ஆகும். இது ஏடிஸ் கொசுக்களால் பரவுகிறது. இந்த நோயின் அறிகுறிகள் அதிக காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, கடுமையான இரத்தப்போக்கு போன்றாவையாகும்.

தொடர்ந்து 2 நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தாலே, உடனடியாக மருத்துவமனைக்கு சென்று டாக்டர்களின் ஆலோசனை பெறுவது அவசியம். டாக்டர்கள் அறிவுரைக்குப்பின், மருத்துவ பரிசோதனை செய்த பிறகு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், டாக்டர்கள் அறிவுறுத்தலின்படி மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.

அத்துடன், இயற்கை மருத்துவ முறைகளான, கீழ்கண்ட உணவுப்பொருட்களையும் மருந்தாக எடுத்துக்கொள்ளலாம். காய்ச்சல் வராதவர்கள், இதை தாராளமாக தாங்களே உட்கொள்ளலாம். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர், டாக்டர்களிடம் கேட்டுக்கொண்டு, அவர்களின் அறிவுறுத்தலின் படி கீழ்கண்ட இயற்கை வைத்தியத்தையும் எடுத்துக்கொள்ளலாம்.

டெங்கு காய்ச்சலைத் தவிர்க்க அல்லது சிகிச்சையளிக்க இயற்கை வழிகள் அதிக பலன் தருவதாக கூறப்படுகிறது. அத்தகைய உணவுகள் குறித்து பார்க்கலாம்…

பப்பாளி இலைகள்:


டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட நபருக்கு  பப்பாளி இலைகள்  ஒரு சிறந்த பயனளிக்க கூடியவை. பப்பாளி இலைகளின் சாறு பிளேட்லெட் எண்ணிக்கையை அதிக அளவில் அதிகரிக்கிறது. பப்பாளி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து கரைசலை குடிக்கலாம். டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்களில் இதுவும் ஒன்றாகும்.

Sharing is caring!