தக்காளி விதையால உயிரை பறிக்கும் ஆபத்தான இந்த நோய் நமக்கு வருதாம்!

நாம் தினமும் சமைக்கும் உணவில் தக்காளி இல்லாமல் சமைப்பது என்பது அரிது.

பழ வகையாக இருந்தாலும் காய்கறியுடன் ஒன்றிணையும் பண்பைக் கொண்ட தக்காளி சாறு நிறைந்த தன்மைக் கொண்ட ஒரு உணவுப்பொருள்.

இந்த தக்காளி பழம் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தன்னிடம் கொண்டுள்ளது. தக்காளியின் தோல், சதைப்பகுதி, விதைகள் என்று எல்லா பகுதியும் சாப்பிடுவதற்கு ஏற்ற விதத்தில் உள்ளன.

  • தக்காளி விதைகளை நாம் சாப்பிடுவதில் எந்த ஒரு தவறும் இல்லை. தக்காளி விதைகளைக் காய வைத்து, தூளாக்கி சாப்பிடலாம், இந்த விதைகளைக் கொண்டு எண்ணெய் தயாரித்து அழகு குறிப்புகளில் பயன்படுத்தலாம்.
  • தக்காளி விதையின் வெளிப்புற ஓடுகள் கடினமாக இருக்கும் காரணத்தால் செரிமானம் ஆகாமல் இருக்கலாம்.
  • ஆனால் வயிற்றில் குடல் பகுதியில் இருக்கும் அமிலம் இந்த வெளிப்புற ஓடுகளையும் செரிமானம் செய்ய உதவுகிறது.
  • வைட்டமின் ஏ மற்றும் சி சத்தின் ஆதாரமாக விளங்கும் இந்த தக்காளி விதைகள் நார்ச்சத்து அதிகமாகக் கொண்டுள்ளது. இதன் காரணமாக குடல் வால் பகுதியில் இவை அழற்சியை உண்டாக்குவதில்லை.
  • தக்காளி விதைகள் இரத்தம் உறைவதைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் இரத்தக் குழாய் வழியே இரத்தம் பாய்வதை அதிகரிக்கவும் உதவுகிறது.
  • அஸ்பிரின் மாத்திரையின் பண்புகளை ஒத்த பண்புகளைத் தக்காளி விதைகள் கொண்டிருப்பதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. இதன் மூலம், தக்காளி விதைகள் இரத்தம் உறையும் அபாயத்தைக் குறைக்க உதவுவதாக அறியப்படுகிறது.
  • தக்காளி விதைகளில் நார்சத்து அதிகமாக உள்ளது. இதனால் எளிதான முறையில் செரிமானத்திற்கு உதவுகிறது. செரிமான அமினோ அமிலங்கள் மற்றும் TMEn ஆகியவற்றை போதுமான அளவு கொண்டிருப்பதால் செரிமானம் மேலும் மேம்படுகிறது.
பக்க விளைவுகள்
  1. தக்காளி விதைகள் உட்கொள்வதால் சிறுநீரக கற்கள் வளர்ச்சி அடைவது அறிவியல் பூர்வமாக நிருபிக்க்கப்படவில்லை என்றாலும், ஏற்கனவே சிறுநீரக கற்கள் பாதிப்பு கொண்ட நபருக்கு இந்த நிலையின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அறியப்படுகிறது.
  2. டைவர்டிகுலிடிஸ் பாதிப்பு உள்ளவர்கள் தக்காளி விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
  3. தக்காளி விதைகள் குடல் பகுதியில் அழற்சியை உண்டாக்குவதாக ஒரு சில வழக்குகள் மட்டுமே அறிக்கைகள் வெளியிட்டுள்ளன.

Sharing is caring!