தடையின்றி காரியம் நடக்க என்ன செய்ய வேண்டும்

செய்யும் காரியங்கள் நன்மையாக நடக்க இறைவனின் அருளை நாடுவோம். அதில் முதல் இடம் பிள்ளையாருக்குத்தான். சுப விசேஷங்கள் எது வாக இருந்தாலும் மஞ்சள் பிள்ளையார் பிடித்து வைத்த பிறகுதான் மற்ற வழிபாடுகள் நடக்கும்.

பிள்ளையாரை மகிழ்விக்கவும் வினைகள் தீர்க்கவும் கீழ்க்கண்ட இந்த மந்திரங்களை சொல்லி வணங்க வேண்டும்.
தினமும் காலையில் பிள்ளையாரை நினைத்து சொல்ல வேண்டிய  ஸ்லோகம்:

கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்

பொருள்:

யானை முகத்தினை உடையவனே.பூத கணங்களால் வணங்கப்பட்டவனே ,விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவனே.. உமையின் புத்திரனே.. துக்கத்தை தீர்ப்பவனே விக்னேஸ்வரனே உனது பாதம் பணிந்து வணங்குகிறேன்.

தடையில்லாமல்  காரியங்கள் முற்றுப் பெற  முதல்வழிபாடு விநாயகருக்கே..கீழ்க்கண்ட இந்த மந்திரத்தைச் சொல்லி பிள்ளையாரை வழிபட்டு காரியம் தொடங்கினால்  தடங்கலின்றி முற்றுபெறும் என்கிறது விஷ்ணுசகஸ்ரநாமம்.

Sharing is caring!