தந்தூரி சிக்கன் பிரியர்களுக்கு…..

நம்மில் பலருக்கு சிக்கன் என்றாலே கொள்ளைப்பிரியம் …அதிலும் தந்தூரி சிக்கன் என்றால் சொல்லவே தேவையில்லை… ஆனால் சிக்கனில் கலோரிகள் அதிகம் என்பதால் சாப்பிட கொஞ்சம் பயமாகத்தான் உள்ளது.. ஆனால்  அதிலிருக்கும் கலோரிகள் பற்றி எல்லாம் கவலைப்படமல் தந்தூரியை சாப்பிடுலாம் என ஆய்வு சொல்கிறது.

எப்படி… எண்ணெயில் பொறித்த உணவுகளைவிட தந்தூரியில் குறைந்த அளவே கலோரிகள் உள்ளதால், உடலுக்கு மிகவும் நல்லதாம்…இந்த தந்தூரி எவ்வாறு ஆரோக்கியமும், ருசியும் கலந்து வீட்டில்சமைப்பது என பார்க்கலாம்…

மசாலா அளவு:

சிக்கன் டிக்கா மசாலா அல்லது ரெகுலர் சிக்கன் டிக்காவை பயன்படுத்தலாம். கலவையை நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளவும். இதனுடன் வெண்ணெய், சாட் மசாலா தேவைப்பட்டால் கலந்து கொள்ளலாம். வெண்ணெயில் நல்ல கொழுப்பு இருப்பதால், உடல் எடை கூடாது.

ப்ரோட்டீன்:

ப்ரோட்டீன் உணவுத் தேவைப்பட்டல் சிக்கன் அல்லது மீன் நல்லது. இறைச்சியில் அதிக அளவு புரோட்டீன் இருந்தாலும் அதிக அளவு கொழுப்பு உள்ளது. சைவ விரும்பிகள் மாமிசத்துக்கு பதிலாக பனீர் தந்தூரி அல்லது டோஃபுவைப் பயன்படுத்தி செய்யலாம்.

நான் ரொட்டி சாப்பிடுவதைத் தவிருங்கள்:

நான் ரொட்டி செய்வதற்கான மாவை ரீஃபைண்ட் ஃப்ளோரில் இருந்து தயாரிக்கிறார்கள். அதில் நார்ச்சத்து இல்லாத கார்போஹைட்ரேட் நிறைந்தது. நார்ச்சத்து இதயத்துக்கு ஏற்றது. அதனால் தந்தூரி சிக்கனோடு கோதுமை அல்லது மல்ட்டிக்ரெய்ன் சப்பாத்தியோடு சாப்பிடுங்கள்.

கிர்ல்டு வெஜிடபிள்ஸ்:

கிரில்டு வெஜிடபிள்ஸூம் செய்து சாப்பிடலாம். இதனுடன் சப்பாத்தியை சேர்த்து சாப்பிடும்போது நன்றாக இருக்கும். ஆரோக்கியமானதும் கூட.

Sharing is caring!