தப்பிதவறி கூட சீரகத்தை அதிகமா சாப்பிடாதீங்க!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் சில பொருட்கள் அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளதாக உள்ளது.

இந்த வகையில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு முக்கிய பண்பு சீரகத்திற்கு உள்ளது.

சீரகத்தை உணவில் சேர்த்து சாப்பிடுவது மிகவும் சிறந்தது தான். ஆனாலும், அதை அதிகம் சேர்த்தால் ஆபத்து தான்.

தீமைகள்
  • அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும்.
  • அசிடிட்டி இருப்பவர்கள் சீரகத்தை கொஞ்சமாக சாப்பிடுவதும், அளவாக பயன்படுத்துவதும் நல்லது.
  • அதிகமாக சீரகத்தை சாப்பிட்டால் அடிக்கடி ஏப்பம் வரும்.
  • ரொம்ப நாளாக அதிகமாக சீரகத்தை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பும் ஏற்படும். சீரகத்தில் இருக்கும் எண்ணெய் எளிதில் அதிக அளவில் ஆவியாவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது.
  • சீரகத்தை அதிகமாக எடுத்துக்கொள்வதால், கர்ப்பினி பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படுகிறது.
  • குறை பிரசவம் உண்டாவதற்கு கூட இது காரணமாக உள்ளது.
  • தினமும் அதிகமாக சீரகம் சாப்பிடுவதால், வயிற்று உப்பசம் ஏற்படும் அதுமட்டுமின்றி குமட்டல், வாந்தி போன்றவையும் ஏற்படும்.
  • மாதவிடாய் காலங்களில் அதிகமாக சீரகம் எடுத்துக்கொண்டால் அது இரத்தப்போக்கை அதிகமாக ஏற்படுத்துகிறதாம்.
  • சீரகம் சக்கரையின் அளவை இரத்ததில் குறைப்பதற்கு உதவுகிறது. எனவே சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் சீரகத்தை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.

Sharing is caring!