தமிழர்களின் மோசமான இந்த வைத்தியங்கள் உயிரை பறிக்கும்..!!

ஆதி தமிழர்களின் ஆரம்ப வாழ்க்கை முறைக்கும் நம்முடைய இன்றைய நவீன வாழ்க்கை முறைக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளது.

மருத்துவ வசதிகள் இல்லாத காலத்தில் கூட நமது முன்னோர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள்.

ஆனால் மருத்துவம் அசுர வளர்ச்சி அடைந்திருக்கும் இந்த காலகட்டத்தில் கூட நம்மால் பூரண ஆரோக்கிய வாழ்வை வாழ முடிவதில்லை.

முன்னோர்களின் ஆரோக்கிய வாழ்விற்கு அவர்கள் கையாண்ட வீட்டு வைத்தியங்கள் முக்கிய காரணமாக இருந்தது.

ஆனால், அதை அவர்கள் கையாண்ட விதமும் வித்தியாசமாக இருந்தது. நவீன காலத்தில் அவை சில சமயம் ஆபத்தை ஏற்படுத்துகின்றது.

சில வீட்டு வைத்தியங்கள் ஆபத்தில் கூட முடியும்.

இனி யாரும் இந்த தவறை மாத்திரம் செய்யாதீர்கள்.
  1. உடைந்த பற்களை மருத்துவரை அணுகாமல் சரிசெய்ய அனைவரும் விரும்புவார்கள். இது கடுமையான உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
  2. சிலர் பல் துலக்கும்போது குழந்தைகளுக்கு ஏற்படும் வலியை குணப்படுத்த மதுவைப் பயன்படுத்துகிறார்கள். குழந்தைகளுக்கு இது எரிச்சலை உண்டாக்கும்.
  3. தீக்காயங்களுக்கு வெண்ணெய் பயன்டுத்துவார்கள். இதன் குளிர்ச்சி பண்புகள் தீக்காயங்களுக்கு சிறிது மிதமான விளைவை ஏற்படுத்தக்கூடுமே தவிர குணப்படுத்தாது. மேலும் இதனால் உங்களுக்கு சில நோய்த்தொற்று ஏற்படும்.
  4. கண்ணனுக்கு அருகில் வரும் கண்கட்டியை ஊசியால் குத்துவது பொதுவான வீட்டு வைத்தியம் ஆகும். ஆனால் இவ்வாறு செய்வது உங்கள் கண்களுக்கு நீங்களே ஆபத்தை ஏற்படுத்துவதாகும். கட்டியை உடைக்கும்போது உங்கள் கண்களில் ஊசிப்பட்டால் அது பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
  5. முட்டையின் வெள்ளைக்கரு உங்களின் சருமத்தை மேம்படுத்தும் என்பதும் வதந்தி ஆகும். இதற்கான எந்த ஆதாரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. முட்டையின் வெள்ளைக்கரு உங்கள் சருமத்தில் இருக்கும்போது இறுக்கத்தை ஏற்படுத்தலாம் ஆனால் கழுவிய பின் அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது.
  6. இது மிகவும் பொதுவான மோசமான வீட்டு வைத்தியமாகும். குளிர்ந்த பாலை குடிப்பது தற்காலிகமான குளிர்ச்சியை ஏற்படுத்தலாம் ஆனால் அதிலுள்ள கொழுப்பு அமிலம் மீண்டும் அமில உற்பத்தியைத் தூண்டும். இதனால் சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் நெஞ்செரிச்சல் ஏற்படலாம்.

உயிரை பறிக்கும் மருத்துவமாக கூட இவை அனைத்து அமைய வாய்ப்புகள் உள்ளன. எச்சரிக்கையாக இருங்கள்.

Sharing is caring!