தம்மை வழிபடுவோருக்கு சகல செல்வங்களையும் அள்ளிக் கொடுக்கும் ஸ்ரீ மஹாலட்சுமியை வழிபடுவது இப்படித் தானாம்..!!

செல்வத்தின் அதிபதியான மகாலட்சுமி சம்பந்தப்பட்ட யோகம் சுக்கிரனின் வலிமையைக்கொண்டு தீர்மானம் செய்யப்படுகிறது.சுய ஜாதக ரீதியாக லட்சுமி யோகம் அமையப்பெற்றவர் பெரும் செல்வ நிலையை அடைந்து, அரசருக்கு சமமாக இருப்பார் என்பதை ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.

மேலும், அனைவராலும் மதிக்கப்படத்தக்க வகையில் நற்குணங்கள் உடையவராகவும், தோற்றத்தில் அழகாகவும், புகழ் பெற்றவராகவும் இருப்பார் என்றும் சொல்லப்பட்டுள்ளது.பிருகு மகரிஷியின் மகன் அசுர குருவான சுக்கிரன். அதனால் அவருக்கு பார்கவன் என்ற பெயரும் உண்டு. பார்கவி என்ற மகாலட்சுமியும், சுக்கிரனும் ஒரே தாய், தந்தையருக்கு பிறந்தவர்கள் என்ற நிலையில் சுக்கிரன் மகாலட்சுமிக்கு உடன் பிறந்த சகோதரன் ஆகிறான்.சுக்கிரனின் அதிதேவதை இந்தி ராணி, பிரத்யதி தேவதை இந்திரன் ஆவார்கள். சுக்கிரனின் ஆதிக்கம் பெற்ற நாளான வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபடுபவர்களுக்கு சகல வளங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.தங்கமும், வெள்ளியும் மகாலட்சுமிக்குப் பிரியமானவை ஆகும். காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவின், ஒவ்வொரு அவதாரத்திலும், மகாலட்சுமியும் உடன் அவதாரம் செய்து அவருக்கு துணையாக வருகிறாள்.

Sharing is caring!