தயிர் சாப்பிடும்போது இந்த ஒரு பழத்தை தெரியாமல் கூட சாப்பிட்டு விடாதீர்கள்!!

பழங்கள் சாப்பிடுவது என்பது நமது ஆரோக்கிய வாழ்க்கைக்கான அவசியமான ஒன்றாகும்.

ஆனால் அனைத்து பழங்களையும் எல்லா நேரமும், எல்லாவற்றுடனும் சாப்பிடக்கூடாது. ஏனெனில் சில பழங்களை தவறான பொருட்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது மரணத்தை கூட ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது.

முக்கனிகளில் ஒன்றான பலாப்பழம் அனைவருக்குமே மிகவும் பிடித்த ஒன்றாகும். அதை சில பொருள்களுடன் சேர்த்து சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

ஆபத்துகள்
  • ஆயுர்வேதத்தில் கூறியுள்ளபடி பலாப்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் ஒன்றோடொன்று கலந்து சில பிரச்சினைகளை உண்டாக்கும்.
  • இவை இரண்டையும் ஒன்றாக சாப்பிடும் போது இது செரிமான பிரச்சினைகளை ஏற்படுத்தும் குறிப்பாக வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.
  • இதனால் மேலும் சில சரும பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது.
அறிவியல்

உண்மைகள் ஆயுர்வேதத்தின் படி இவை இரண்டும் ஆபத்தான உணவாக இருந்தாலும் விஞ்ஞானரீதியாக பார்க்கும் போது அவை ஆரோக்கியமான பொருளாகவே கருதப்படுகிறது.

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் தயிரில் பலாப்பழம் சேர்ப்பது அதன் தரத்தை அதிகரிக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரண்டையும் சரியான அளவில் கலந்து சாப்பிடுவது உங்களுக்கு இருமடங்கு பலனை தரும்.

ஆனால் தவறான அளவில் சாப்பிடுவது பிரச்சினையைத்தான் உண்டாக்கும்.

செரிமான கோளாறுகள்

பலாப்பழம் தொடர்ந்து சாப்பிடுவது உங்களுடைய செரிமான மண்டலத்தின் செயல்பாடுகளை சீராக்கும். அதற்கு காரணம் இதிலிருக்கும் அதிகளவு நார்ச்சத்துக்கள் ஆகும். 100 கிராம் பலாப்பழத்தில் 3.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இதனை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுவலி வரும் என்ற அச்சமே உங்களுக்கு தேவையில்லை. மேலும் இது பெருங்குடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும் வேலையையும் செய்கிறது.

Sharing is caring!