தர்மத்தை மீறுபவர்கள் அழிந்து விடுவார்கள்

எப்போதெல்லாம் எங்கெல்லாம் தர்மம் மீறப்பட்டு அதர்மம் தலைதூக்கப்படுகிறதோ அப்போதெல்லாம் அதர்மத்தை செய்து மனசாட்சியை மீறு பவர்கள்  அழிந்துவிடுவார்கள்.மகாபாரதத்தில் கிருஷ்ணனே இதைக் கூறியிருக்கிறார்.

சூதாட்டத்தில் அனைத்தையும் இழந்த பாண்டவர்கள் தங்கள் தண்டனைக்காலம் 12 வருடங்கள் முடிவடைந்ததும் தங்களுடைய நாட்டை  திரும்ப பெற விரும்பினார்கள்.ஆனால் துரியோதனன் பாண்டவர்களுக்கு ஊசி முனை அளவு இடத்தைக் கூட தரமுடியாது என்று உறுதியாக மறுத்து சஞ்சயன் மூலமாக தூதனுப்பினான். அதனால் பாண்டவர்கள் கிருஷ்ணனைத் தூதுவனாக அனுப்ப விரும்பினார்கள்.

கிருஷ்ணனை வரவழைத்து சஞ்சயன் கூறியதையும், திருதராஷ்டிரன் தன்னுடைய மகன் மீது கொண்டுள்ள அளவற்ற அன்பினால் அவரும் விட்டுகொடுக்க சொல்கிறார். எங்களுக்கு சேர வேண்டிய அனைத்தையும் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. ஐந்து ஊர்களையாவது கொடுங்கள் என்று கேட்டு தூது செல்லுங்கள் என்றார்கள். கிருஷ்ணன் தூது செல்வதை அறிந்ததும் பாண்டவர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்து ஒப்புவித்தார்கள்.

முக்காலமும் உணர்ந்த கிருஷ்ணனுக்கு நடப்பவை அனைத்தும் தெரியும் என்றாலும் பாண்டவர்களின் வார்த்தைகளுக்காக தூது செல்ல சம்மதித் தார்.கிருஷ்ணன், சாத்யகியை அழைத்துக்கொண்டு தேரில் ஏறி அஸ்தினாபுரம் சென்றார். துரியோதனனும் திருதராஷ்டிரனும் கிருஷ்ணனை வர வேற்க விழாவை ஏற்பாடு செய்தார்கள்.ஆனால் கிருஷ்ணன் நேராக திருதராஷ்டிரனின் அரண்மனையை அடைந்தார்.

கிருஷ்ணரைக் கண்டதும் பீஷ்மர், துரோணர் அனைவரும் மரியாதை செய்தார்கள்.அவர்களுடன் உரையாடிய பிறகு காந்தாரியைச் சந்திக்கச் சென்ற கிருஷ்ணர் அவளிடமும் நலம் விசாரித்து துரியோதனனைக் காண சென்றார். துரியோதனன், கிருஷ்ணனை உணவருந்த அழைத்தான். ஆனால்  கிருஷ்ணன் மறுத்து தூதுவனாக வந்திருக்கும் நான் அவர்கள் சார்பில் கேட்பதைப் பெற்ற பிறகு தான் விருந்தை ஏற்கமுடியும் என்று சொல்லிவிட்டார்.

திருதராஷ்டிரனிடம்  சென்ற கிருஷ்ணன், பாண்டவர்களும் உங்கள் மக்களே. அதனால் துரியோதனனின் பிடிவாதத்தைத் தளர்த்த சொல்லுங்கள் என்றார். திருதராஷ்டிரன் வருத்தத்தோடு, கிருஷ்ணா நீ சொல்வதை நான் ஏற்கிறேன். ஆனால் எனது புத்திமதியை ஏற்கும் நிலையில் துரியோத னன் இல்லை. என்னை மன்னித்து விடு கிருஷ்ணா என்றார். கிருஷ்ணர் இறுதியாக துரியோதனனை அணுகினார். துரியோதனைச் சுற்றி இருந் தவர்களும் அவனுக்கு புத்தி உரைத்தனர். ஆனால் எதையும் கேட்க துரியோதனன் தயாராக இல்லை.

Sharing is caring!