தலையில் பொடுகு தொல்லை அரிப்பு ஏற்படுகிறதா?

பொதுவாக நம் முடி மற்றும் சருமத்தை தினமும் பராமரிப்பது கஷ்டமான ஒன்று. இதில் ஒவ்வொரு பருவக்காலத்திலும் சருமம் மற்றும் முடியினை பராமரிக்க நம் சற்று அதிகமாக பாதுக்காப்பு எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. வெயில் காலத்தில் வேர்வை பிரச்சனை, குளிர்காலத்தில் சரும வறட்சி மற்றும் மழைக்காலத்தில் சரும எரிச்சல், அரிக்கும் தலை போன்ற பிரச்சனைகள் ஒவ்வொரு காலத்திலும் பருவ நிலைக்கு ஏற்ப மாறுபட்டு ஏற்படுகிறது.

மேலும், மழைக்காலம் வந்துவிட்டால் போதும் நம்மில் பலருக்கு இருக்கும் அதிகபட்ச பிரச்சனை தலையில் ஏற்படும் அரிப்பு. மழைக்காலத்தில் ஏற்படும் தலை அரிப்புக்கு வானிலை மாற்றம், சூரியஒளி இல்லாமை, சுற்றியுள்ள பூஞ்சைகள் மற்றும் காற்று மாசுபாடு ஆகியவை காரணங்களாக உள்ளன. இதற்கு எல்லா வகையிலும் நம்மால் வீட்டில் இருந்தே தீர்வு காண முடியும்.

மழைக்காலத்தில் தலையில் ஏற்படும் அரிப்புக்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் எது உங்கள் தலை அரிப்புக்குக் காரணம் என்பதை முதலில் கண்டறிந்துக் கொள்ளுங்கள். பின்னர் அதற்கான வீட்டு வைத்தியம் மூலம் ஈசியாக அகற்றி விடலாம்.

பொடுகுத்தொல்லை
இந்த மோசமான வானிலையால் பூஞ்சைகள் உண்டாக அதிக அளவில் வாய்ப்புள்ளது. இந்த பூஞ்சைகள் தான் பொடுகை உருவாக்கும் தன்மையைக் கொண்டுள்ளது. உங்கள் தலையில் பொடுகு உள்ளதா என்பதை முதலில் உறுதி செய்துக் கொள்ளுங்கள்.

செபொர்ஹெக் டெர்மடிடிஸ்
இது ஒரு விதமான தோல் அழற்சினால் ஏற்படும் அரிப்பாகும். இந்த அரிப்பு உச்சந்தலையில் ஏற்படும் போது தோல் சிவந்தல் மற்றும் செதில் செதிலாக மாறும்.

ஒட்டுண்ணி
அதாவது ஒட்டுண்ணி என்பது பேன் மற்றும் பேன்களின் முட்டைகளினால் ஏற்படும். மேலும் அடுத்தவர்களின் தலையில் பயன்படுத்திய சீப்பு, பேன் உள்ளவர்களின் அருகில் படுத்து உறங்குதல் போன்றவை ஒட்டுண்ணிகளுக்கு வழிவகுக்கும்.

உணவு முறை
தினமும் உண்ணும் உணவுகளும் நமது ஆரோக்கியமான முடி மற்றும் உடலுக்கு முக்கிய பங்காற்றுகிறது. நீங்கள் உண்ணும் உணவில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதும் உங்கள் தலை அரிப்பிற்கு ஒரு காரணமாகும்.

முடி சுகாதாரம்
முடியை நீங்கள் சரியாக அலசாததும் அரிக்கும் தலைக்கு ஒரு காரணமாகும். உங்கள் முடியை சரியாக அலசாமை, எண்ணெய் வைக்காமை மற்றும் குறைவான பராமரிப்பு ஆகியவை ஒரு முக்கிய காரணங்களாகும்.

வீட்டு வைத்தியங்கள்
மழைக்காலத்தில் ஏற்படும் தலை அரிப்பை நீங்கள் வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக அகற்றலாம். உங்களுக்கான எளிதான வீட்டு வைத்தியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உங்கள் முடிக்கு எது சிறந்ததோ அதை தேர்வு செய்து நீங்கள் முயற்சி செய்யுங்கள்.

தேங்காய் எண்ணெய்
நம்மில் பல பேர் இப்போது தலைக்கு தேங்காய் எண்ணெய் வைப்பதே இல்லை. ஆனால் உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது தேங்காய் எண்ணெய் தலையில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து அலசிவிடுங்கள்.

பேக்கிங் சோடா
சிறிது பேக்கிங் சோடா மற்றும் கொஞ்சம் தண்ணீர் கலந்து உங்கள் முடியின் வேர் பகுதியில் தடவுங்கள். சற்று நேரம் கழித்து அலசி விடுங்கள்.

கற்றாழை
எல்லோருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய ஒன்று கற்றாழை. இதில் உள்ள சதைப்பகுதியை எடுத்து உங்கள் முடிகளின் வேர்பகுதிகளில் தடவுங்கள். இது உங்களுக்கு அரிப்புகளில் இருந்து விடுதலைத் தரும்.

ஷாம்பூ
ங்கள் முடிக்கு ஏற்ற ஷாம்பூகளை தேர்வு செய்யுங்கள். நீங்கள் தேர்வு செய்யும் ஷாம்பூ ஆன்டி-பயோடிக் ஆக இருந்தால் நல்லது. இவை உங்கள் தலையில் ஏற்படும் அரிப்பைத் தடுக்க உதவும்.

உணவுமுறை
உங்கள் உணவில் கண்டிப்பான முறையில் பழங்கள், கீரைகள் மற்றும் காய்கறிகள் போதுமான அளவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மேலும் மழைக்காலத்திலும் தேவையான அளவு தண்ணீர் பருக வேண்டும்.

Sharing is caring!