தானம் செய்யும் போது மறந்தும் கூட இவற்றை செய்து விடாதீர்கள்… துரதிஷ்டம் துரத்துமாம்..!!

தானத்தில் சிறந்தது இரத்ததானம். அதை எவ்வளவு வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதே போல் பசியால் வாடி வருபவருக்கு அன்னதானம் கொடுப்பதும் மிகவும் நன்மை பயப்பதாகும்.

ஆனால், சில பொருள்களை மட்டும் தானமாக வழங்கவே கூடாதாம். அப்படிக் கொடுத்தால் துரதிஷ்டம் துரத்தி, துரத்தி அடிக்கும். அது என்ன எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள். கிழிந்த துணிகள், உடைந்த பொருள்களை தானமாக வழங்கவே கூடாது.

துடைப்பம் இருக்கிறதே அதை தானமாக கொடுப்பது வீட்டில் இருக்கும் லெட்சுமியை கொடுப்பது போல்! அது நமக்கே பொருளாதாரச் சிக்கலை உருவாக்கும்.
பிளாஸ்டிக் பொருள்களை தானமாகக் கொடுப்பது வளர்ச்சித்தடையை உருவாக்கும்.

பழைய உணவை தானமாக வழங்கினால் வருமானத்தை மிஞ்சிய செலவை உருவாக்கும். அதனால் தானம் கேட்டு வருவோருக்கு நல்ல உணவையே வழங்கலாம்.
கூர்மையான பொருள்களான கத்தி, கத்திரிகோல், ஊசியை எல்லாம் தானமாக வழங்கினால் துரதிஷ்டத்தை உருவாக்கி விடும். ஆக, தானம் வழங்குவதிலும் இனி கவனமாக இருங்கள்!

Sharing is caring!