தாய்ப்பால் அருந்தும் குழந்தைக்கு கிடைக்கும் நன்மைகள்

வயிற்றில் பாதுகாப்பாய், தாயிடம் இருந்து சுத்தமான சத்துக்களை தொப்புள் வழியாக மட்டுமே உட்கொள்ளும்  குழந்தை, பூமிக்கு வந்தவுடன் முதலில் வாய் வழியாக உட்கொள்ளும் உணவு தாய் பால். குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு சுரக்கும் மஞ்சள் நிறம் கலந்த பாலை மட்டுமே கொடுக்க வேண்டும். மாறாக தேன், சர்க்கரை நீர் போன்றவற்றை கொடுக்கக் கூடாது. ஏனெனில், முதலில் சுரக்கும் சீம்பாலில்  உலகை முதல் முறை பார்க்கும் பச்சிளம் குழந்தைக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்திகள் நிறைந்திருக்கும்.

தாய் பால் கொடுக்கிறேன் என்கிற பெயரில் சிலர், பாட்டிலில் தாய்ப்பாலை எடுத்து வைத்து விட்டு பணிக்கோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சென்று விடுகின்றனர். உண்மையில் தாய்ப்பாலை நேரடியாக தாயின் மார்பில் இருந்து தான் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

தாயின் மார்பில் குழந்தை பால் அருந்தும் பொழுது குழந்தையின் வாயிலிருந்து சுரக்கும் உமிழ் நீரின் மூலம் குழந்தைக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டுள்ளதா அல்லது தேவையான சத்துக்கள் என்னென்ன என்பதை  உணர்ந்து தாயின் உடல்  இயற்கையாகவே தேவையான எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.இந்த சத்துக்களை தாய்ப்பாலின் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும்.

தாய் பால் கொடுப்பதால் குழந்தை வயிறு சம்மந்தமான  உபாதைகள் மற்றும் மலசிக்கல் போன்றவற்றை சந்திக்க நேரிடாது.

தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட நல்ல புத்தி கூர்மையுடன் திகழ்வதாக ஆய்வு முடிவுகள் சொல்கின்ற.

Sharing is caring!