திடீரென மேடையில் சரிந்து வீழ்ந்து உயிரிழந்த பிரபல பாடகர்!

பிரபல பாடகர் பாடிக்கொண்டிருக்கும்போதே மேடையில் சரிந்து விழுந்து மரணமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் மங்களூரைச் சேர்ந்தவர் பிரபல கொங்கனி இசையமைப்பாளர் ஜெர்ரி பஜோடி. இவர் ஒரு சிறந்த பாடகரும் கூட. இவருக்கு வயது 51.

ஜெர்ரி பஜோடி பல இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஒரு இசை நிகழ்ச்சியில் பாடிக்கொண்டிருந்த போது மேடையிலேயே மயங்கி சரிந்து விழுந்தார். அதன் பின்பு அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்பு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டது தெரியவந்தது. தீடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாகவே உயிரிழந்தார் என அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர்.

ஜெர்ரி பஜோடி 60 க்கும் மேற்பட்ட பாடல்ளுக்கு இசையமைத்துள்ளார். இவரது ”நச் பங்காரா” என்ற இசைத் தொகுப்பு கர்நாடகாவில் பலராலும் ரசிக்கப்பட்ட ஒன்று எனவும் கூறப்படுகிறது.

Sharing is caring!