தினமும் அனுமன் புகழ்பாடி ஆஞ்சநேயப் பெருமானைத் துதிப்போம்..!

அச்சத்துடனும் குழப்பத்துடனும் வாழ்க்கையைக் கடத்துபவர்தானே நாம். கவலையே வேண்டாம்… நமக்கெல்லாம் ஆபத்பாந்தவனாக அஞ்சனை மைந்தன், அனுமன் இருக்கிறார். எவரொருவர் அனுமனை மனதார நினைத்து, பிரார்த்தனை செய்கிறார்களோ, அவர்களுக்கு மனதில் தைரியத்தையும் ஊக்கத்தையும் உற்சாகத்தையும் உத்வேகத்தையும் தந்தருள்வார் ஆஞ்சநேயர் என்று போற்றுகிறார்கள் பக்தர்கள்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே ,வாயு புத்ராய தீமஹி, தந்நோ ஹனுமன் ப்ர்சோதயாத் 

எனும் ஸ்லோகத்தை. தினமும் சொல்லுங்கள். காலையும் மாலையும் சொல்லுங்கள். முடிந்தபோதெல்லாம் சொல்லி, அனுமனை வழிபடுங்கள். நம்மை அச்சத்தில் இருந்தும் துக்கத்தில் இருந்தும் காத்தருள்வார் ஆஞ்சநேயர் என்கிறார்கள் .புதன் கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு உகந்த நாட்கள். அதேபோல், மாதந்தோறும் வருகிற மூல நட்சத்திர நாளும், ஆஞ்சநேயருக்கு உகந்த அற்புதமான நாள். எனவே இந்த நாட்களில், மறக்காமல் அனுமனை வழிபடுவோம். அவரைத் தரிசிப்பதும் அவர் சந்நிதிக்கு முன்னே நின்று வணங்குவதும் பலத்தையும் பலனையும் வாரி வழங்கும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.அனுமனைத் துதிப்போம். அவனருள் பெற்று வாழ்வோம்!

Sharing is caring!