தினமும் ஒரு கப் பழம் சாப்பிட்டு பாருங்க…

பழங்களில் பொட்டாசியம் நிறைவாக உள்ளதால், ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்கிறது. மேலும் சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது. வயிறு நிரம்பிய உணர்வைத் தந்தாலும் இதில் கலோரி மிகமிகக் குறைவாகவே உள்ளது. இதனால் பழம் சாப்பிட்டால் உடல் பருமன் என்ற கவலை வேண்டாம்.

  • அன்னாசி அப்ழத்தில் வைட்டமின் பி உயிர்சத்துகள் அதிக அளவில் உள்ளது அது உடலில் ரத்தத்தை விருத்தி செய்வதாகவும் உடலுக்கு பலத்தை தருவதாகவும் இருப்பதோடு பல் வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் இருக்கிறது.
  • உடலில் போதுமான ரத்தமில்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு சிறந்த டானிக். இதனால் ரத்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.
  • விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச் சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது.
  • மாதுளம் பழத்தை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கலிலிருந்து குணம் பெறலாம். வறட்டு இருமல் உள்ளவர்கள் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மாதுளம் பழம் சாப்பிட்டு வந்தால் இருமல் குணமாகும்.
  • தினமும் வாழைப்பழம் ஒன்றை சாப்பிட்டு வந்தால் மூல நோயிலிருந்து விடுபடலாம். மேலும் கண் பார்வை தெளிவடைய ஆரம்பிக்கும்.
  • பருக்கள் வருவதைத் தடுக்க நினைப்பவர்கள், வைட்டமின் ஏ சத்து நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும். வைட்டமின் சி உள்ள காய்கறி பழங்களை அப்படியே சாப்பிடுவதுதான் நல்லது. இதனைச் சூடுபடுத்தும்போது வைட்டமின் சி குறைந்துவிடும் அல்லது அழிந்துவிடும்.
  • சூரிய வெளிச்சம், காற்று கூட வைட்டமின்-சி சத்துக்கு எதிராக செயல்படக் கூடியவை. எனவே, வைட்டமின் சி நிறைவாக உள்ள பழங்களை உடனடியாக சாப்பிட்டுவிட வேண்டும். நீண்ட நேரம் வைத்திருக்கக் கூடாது. பழங்களை தினமும் சேர்த்துக்கொள்வோம். நல்ல ஆரோக்கியம் பெறுவோம்.

Sharing is caring!