தினமும் முடி உதிர்கிறதா?

தலைமுடி என்பது ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முக்கியம் என்பதை சொல்ல வேண்டியதில்லை.

முகத்தின் அழகு கூடுவதற்கு காரணமே நம் தலைமுடி தான். முடி உதிர் இன்று தீவிர வியாதி போல பரவி வருகின்றது. அதனை தடுக்க நிச்சயம் பாட்டி வைத்தியம் உதவியாக இருக்ககும்.

இயற்கை பொருட்களை மட்டுமே கொண்டு மிகச்சிறந்த தீர்வினை பெற்று கொள்ள முடியும். தினமும் தலைவாறும் போது சீப்பில் கொத்துக் கொத்தாக முடி உதிர்கிறதா? உதிர்ந்த முடிகளை பார்க்கும் போது எல்லாம் கவலையாக இருக்கிறதா?

இந்த மூன்று பொருட்களையும் இப்படி பயன்படுத்தி நல்ல ஆரோக்கியமான பலன்களை பெற்று கொள்ளுங்கள்.

முட்டை
 • விளக்கெண்ணை
 • தேன்
  செய்முறை
  • முட்டை 1
  • விளக்கெண்ணை – 2 டேபிள் ஸ்பூன்
  • தேன் – 1 டேபிள் ஸ்பூன்

  மேலே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் ஒன்றாக கலந்து முடியில் தடவுங்கள்.

  பின்னர் நன்றாக சில மணி நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.

  அத்துடன், 1 முதல் 2 மணிநேரம் வரை ஊற வைத்து முடியை நன்றாக அலச வேண்டும். இதனை வாரத்தில் ஒருமுறை செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்தால் முடி உதிர்வுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.

Sharing is caring!