தினமும் 2 கிளாஸ் இந்த டீ குடிச்ச போதும்! ஒரே மாசத்துல 10 கிலோ குறைஞ்சிடலாம்..!!

உடல் பருமன் தான் உலகம் முழுவதும் உள்ளவர்களை அச்சுறுத்துகிற விஷயமாக இருக்கிறது. ஏனென்றால் இதய நோயால் தான் பெரும்பாலும் இறந்து போகிறார்கள்.

அந்த இதய நோய்க்கு மிக அடிப்படையான ஆதாரமாக இருப்பதே இந்த உடல் பருமன் தான்.

இதற்கு மருத்துவ சிகிச்சைகள் பல இருந்தாலும் அவை பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. அதனால் இயற்கையான பானம் மற்றும் உடற்பயிற்சியின் மூலம் குறைப்பது தான் நல்லது.

உங்களுக்குப் பிடித்த எல்லாவற்றையும் சாப்பிடலாம். இந்த டீயை மடடும் ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை குடிங்க போதும். எப்பேர்ப்பட்ட பானை வயிறு ஒரே மாசத்துல குறைஞ்சு நீங்க சிக்குனு ஆயிடுவீங்க.

கருஞ்சீரக டீ தயாரிப்பது எப்படி?

தேவையான பொருட்கள்

  • கருஞ்சீரகம் – 2 ஸ்பூன்
  • புதினா – ஒரு கைப்பிடியளவு
  • இஞ்சி – 1 இஞ்ச் அளவு
  • தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி சூடுபடுத்த வேண்டும்.

தண்ணீர் சூடேறியதும் அதில் 2 ஸ்பூன் கருஞ்சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். அப்படி கொதித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இஞ்சியைத் தோல் சீவி நன்கு நசுக்கி (தட்டி) அதில் போட வேண்டும்.

அதன்பின் அடுப்பை சிறு தீயில் குறைத்துக் கொண்டு, அதில் புதினா இலைகளையும் கொஞ்சம் ஒன்றிரண்டாக நசுக்கியோ கசக்கியோ அதில் போட்டு கொதிக்க விட வேண்டும்.

புதினா போட்டு இரண்டு நிமிடங்களில் அடுப்பை நிறுத்திவிட வேண்டும்.

எப்படி பருகுவது

  • இப்போது டீ பாதி தயாராகிவிட்டது. இதை வடிகட்டி வைத்துக் கொள்ளுங்கள். ஒரு டம்ளர் டீக்கு அரை எலுமிச்சை போதுமானதான இருக்கும். அரை எலுமிச்சையை பிழிந்து விட்டு அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்கி காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் குடியுங்கள்.
  • அதேபோல் மாலையோ இரவிலோ இன்னொரு கிளாஸ் குடிக்க வேண்டும்.
  • காலையிலேயே மொத்தமாகப் போட்டு வைத்துக் கொண்டு, குடிக்கிற பொழுது மட்டும் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்துக் கொள்ளலாம். தவறில்லை.
  • முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது. இதை சூடாக மட்டும் தான் குடிக்க வேண்டும். அதனால் ஏற்கனவே போட்டு வைத்த டீயை குடிப்பதாக இருந்தால் ஒவ்வொரு முறையும் சூடுபடுத்திக் குடிக்க வேண்டும்.
  • இந்த எடை குறைக்கும் பானத்தைக் குடிக்கும் காலங்களில் டீ, காபியை எக்காரணத்தைக் கொண்டும் குடிக்கக் கூடாது.

Sharing is caring!