திருநீற்றுப்பச்சிலை செடியின் அற்புத நன்மைகள்..!

மூலிகைகளின் அரசன் என்று அழைக்கப்படும் திருநீற்றுப்பச்சிலை, துளசியைப் போன்றே தெய்வீக தாவரமாகும். பூக்களுக்கு மணம் உண்டு, அதேபோல சில இலைகளும் நறுமணம் வீசுவதுண்டு. அப்படியொரு சிறப்பு பெற்றது திருநீற்றுப்பச்சிலை.

திருநீற்றுப்பச்சிலை எனபது பல நோய்களை குணப்படுத்தும் அறிய வகையான செடி. திருநீற்றுப் பச்சிலை இலைகளும் மணம் வீசுவதுண்டு. உருத்திரசடை, பச்சை, பச்சிலை, சப்ஜா என்ற பெயர்களும் இதற்கு உண்டு.

நறுமணம் வீசும் இந்தச் செடியின் இலைகளை அரைத்துப் பூசினால் கட்டிகள் கரையும். வெறுமனே இலையை முகர்ந்து பார்த்தால் தலைவலி, இதயநடுக்கம், தூக்கமின்மை சரியாவதுடன், மூக்கில் வரும் வியாதிகள் சரியாகும்.

பீட்டா கரோட்டின், லுடீன், ஸீக்ஸாக்தைன், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே அதிகமாக உள்ளது. பொட்டாசியம், மாங்கனீசு, தாமிரம், கால்சியம் மற்றும் மக்னீசியம், மற்றும் வைட்டமின் சி போன்ற கனிமங்கள் சரியான அளவை கொண்டுள்ளது. இந்த விதையில் இரும்பு சத்தும் அதிகமாக உள்ளது.

திருநீற்றுப்பச்சிலையின் விதை மிகவும் குளிர்ச்சியானது. அதனால் தான் இந்த விதையை குளிர்பானங்களில் சேர்க்கிறார்கள். சளி, சுவாச கோளாறு போன்ற பிரச்சனைகளுக்கு இந்த விதை மிகவும் நன்மை அளிக்க கூடியதாக இருக்கிறது.

 செரிமானம் சீரான முறையில் நிகழ்வதற்கு இந்த விதை பயனுள்ளதாக இருக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது. தோல் நோயிற்கு நல்ல மருந்தாக இந்த விதை இருக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

திருநீற்றுப்பச்சிலையின் விதையை கசாயம் செய்து குடித்து வந்தால் சுறுசுறுப்பு கிடைப்பதோடு மூத்திரக்கோளாறுகள் சரியாகும். இதன் விதைகளை தண்ணீரில் ஊறவைத்து, சர்பத்தில் போட்டு குடித்து வந்தால் சீதபேதி, வெள்ளை, வெட்டைச்சூடு, இருமல் சரியாகும்.

Sharing is caring!