திருமண தடை நீங்கி உடனே நல்ல வரன் அமைய இதை செய்யுங்க!

அந்த காலத்தில் 12 – 13 வயதுகளில் ஆண், பெண் இரு பாலருக்கும் திருமணம் நடந்து வந்தது. ஆனால் இன்று பலருக்கும், 30 வயதை கடந்தும் திருமணம் நடப்பதில் பல சிக்கல்கள் இருக்கிறது. தகுந்த மாப்பிள்ளை அல்லது பெண் கிடைக்காதது அல்லது ஜாதக பொருத்தம் இல்லாதது, குரு பார்வை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் திருமணம் தள்ளிப்போகிறது. அப்படிப்பட்டவர்கள் கீழ்கண்ட முறைகளை கடைபிடித்தால் திருமண தடை நீங்கி உடனே திருமணம் நடைபெறும்.

துளசி கல்யாணம் செய்தால், விரைவில் திருமணமாகும். ஓர் ஏழைப்பெண்ணுக்கு எண்ணெய் ஸ்நானம் செய்வித்து, சக்திக்கு ஏற்ப புத்தாடை அளித்து உணவு அளித்தால், திருமணம் விரைவில் நடைபெறும்.

ஜாதகத்தில், 7-ல் ராகு இருப்பது கடுமையான திருமண தோஷமாகும். எவ்வளவு முயன்றும் திருமணம் கூடுவதில்லை. இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு உள்ளவர்கள்,  செவ்வாய் அல்லது,வெள்ளிக்கிழமைகளில்,ராகு கால நேரத்தில், துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு ஏற்றி வரவும். இவ்விரதம் ஒன்பது வாரங்கள் செய்து வர, திருமணம் தோஷம் விலகும். திருமணம் கூடி வரும்.

சென்னை-திருவேற்காட்டில் ஸ்ரீதேவி கருமாரி அம்மன் கோவில் உள்ளது. பல்வேறு புராணச் சிறப்புகள் மிக்கது. திருவேற்காடு கருமாரியம்மனை தரிசிக்கும் கன்னிப்பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம் கூடி வருகிறது.

கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ஆலங்குடியில் வீற்றிருக்கிறார் குரு பகவான். அங்குள்ள தட்சிணாமூர்த்தியை வணங்கினால் திருமண யோகம் உண்டாகும்.

வேப்ப மரத்தடியில் வீற்றிருக்கும் பிள்ளையாரை, கடலை எண்ணெய் நீங்கலாக. பிற பஞ்ச தீப எண்ணை ஊற்றி, தீபம் ஏற்றி ,மஞ்சள் பொடி அபிஷேகமும், பால் அபிஷேகமும் செய்து வழிபட்டு வந்தால் மனதிற்கேற்ற வாழ்க்கை துணை அமையும்.

காஞ்சி கச்சபேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நாகமூர்த்திகளை வெள்ளிக்கிழமை மற்றும் பஞ்சமி நாட்களில், அடிப்பிரதஷணம் செய்யுங்கள். ஏழை சுமங்கலிப் பெண்களுக்கு மாங்கல்யச் சரடு தானம் செய்யுங்கள். சகல திருமண தோஷமும் தீரும்.

Sharing is caring!