திருவோண நட்சத்திரகாரர்கள் செல்வம் கொழிக்க இதை செய்யுங்கள்

திருவோணம் நட்சத்திரம் 27 நட்சத்திரங்களின் வரிசையில் 22 வது நட்சத்திரமாக வருகிறது.12 ராசிகளில் சனி பகவானுக்குரிய மகரம் ராசிக்கு உரிய நட்சத்திரமாக இந்த திருவோணம் நட்சத்திரம் இருக்கிறது.அந்தவகையில் திருவோணம் நட்சத்திரக்காரர்கள் கீழ்க்கண்ட பரிகாரங்களை செய்து வருவதால் வாழ்வில் செல்வ செழிப்போடு வாழலாம் என்று சொல்லப்படுகின்றது. தற்போது அந்த பரிகாரத்தினை பார்ப்போம். திருவோணம் நட்சத்திரக்காரர்கள் தங்களின் வாழ்வில் செல்வச் செழிப்பையும், அதிர்ஷ்டங்களையும் எப்போதும் பெறுவதற்கு வருடம் ஒருமுறையாவது சந்திர பகவானுக்குரிய தலங்களாக இருக்கும் திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவில், திங்களூர் சந்திர பகவான் கோயில் ஆகிய தலங்களுக்குச் சென்று சந்திர பகவானுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.

மாதந்தோறும் வரும் திருவோணம் நட்சத்திர தினத்தில் பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளையும், தாயாரையும் வழிபட வேண்டும்.திங்கட்கிழமைகளில் தூய வெள்ளை நிற ஆடைகளை அணிந்து கொள்வதால் உங்களுக்கு காரிய வெற்றியும், மிகுந்த பொருள் வரவு ஏற்படும்.உங்களால் முடிகின்ற பட்சத்தில் மாதம் ஒரு முறை மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்குவது உங்களுக்கு சந்திர பகவானின் மிகுதியான அருட்கடாட்சம் பெற்றுத் தரும்.திருவோண நட்சத்திரத்திற்குரிய விருட்சமாக எருக்கம் செடி இருக்கிறது. எருக்கஞ்செடி தலவிருட்சமாக இருக்கும் கோயில்களுக்கு சென்று தல விருட்சத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபட வேண்டும்.

பௌர்ணமி தினங்களில் இரவு நேரத்தில் வானில் முழு நிலவாக தோன்றும் சந்திரனைப் பார்த்தவாறு சந்திர பகவானுக்குரிய மந்திரங்கள்,துதிகளை துதித்து அவரை வழிபடுவதால் உங்களுக்கு திடசித்தம், உடல் ஆரோக்கியம் மற்றும் ஜன வசீகரம் ஏற்பட்டு அனைத்து காரியங்களிலும் வெற்றி உண்டாகும்.

Sharing is caring!