தீராத நோய் தீர வீட்டிலேயே செய்யும் எளிய பரிகாரம்!

சிலருக்கு எப்போதும் ஏதாவது ஒரு உபாதை உடலில் இருந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியம் இல்லாவிட்டால் வாழ்வில் எதையும் அனுபவிக்க முடியாது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது நிதர்சனமான உண்மை.

அடிக்கடி உடம்புக்கு முடியாதவர்களுக்கான பரிகார தெய்வம் சூரிய பகவான். ஞாயிற்றுக்கிழமையில் இவரை வழிபடுவது சிறப்பு. சிவாலயத்தில் சுவாமியின் வலப்புறத்தில் இவருக்கு சந்நிதி இருக்கும். நவக்கிரக மண்டபத்திலும் வீற்றிருப்பார். இவருக்கு செந்தாமரை மலர் சூட்டி வழிபடலாம்.

செலவில்லாத எளிய பரிகாரம் ஒன்றும் இருக்கிறது. காலையில் நீராடிய பின், கிழக்கு முகமாக நின்று சூரியனை இருகரம் கூப்பி வணங்குங்கள்.
‘ஜபாகு ஸும சங்காஸம் காஸ்யபேயம் மகாத்யுதிம் தமோரிம் சர்வ பாபக்னம் பிரணதோஸ்மி திவாகரம்’
என்னும் ஸ்லோகத்தை சொல்லி வாருங்கள். ஆரோக்கியம் பெறுவீர்கள்.

 ஞாயிற்றுகிழமையன்று, காலையில், குளித்து முடித்து, சூரியனை வணங்கி, அகஸ்திய முனிவர் அருளிய, ‘ஆதித்யஹிருதயம்’ ஸ்லோகத்தை  பாராயணம் செய்தால், உடல் நலம் மேம்படும்., கண் தொடர்பான பிரச்னைகள் நீங்கும்.

Sharing is caring!