தீவிரமாக பரவும் டெங்கு காய்ச்சலை விரட்டியடிக்க உங்களுக்கே தெரியாத வீட்டு மருந்து!அதிகம் பகிருங்கள்

மழைக் காலங்கள் தொடங்கி விட்டால் போதும் கொசுக்களின் தொல்லைகள் தாங்க முடியாது.சளி, இருமல், டெங்கு காய்ச்சல் உட்பட தொற்று நோய்களும் நம்மை அதிகமாக தாக்குகின்றன. இதற்கு நாம் அதிகளவில் நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டும், குறிப்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமாகிறது.

நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை:நிலவேம்பு பொடி என்பது நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோறைக் கிழக்கு போன்றவை சேர்ந்த பொடியாகும். 5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மிலி தண்ணீரில் போட்டு 50 மிலி அளவுக்கு சுண்டும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும். அதன்பின் கசாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும்.

எப்போது எப்படி குடிக்க வேண்டும்?காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும்.

தயாரிக்கப்பட்ட கசாயத்தை 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும், அதற்கு மேல் அதில் வீரியம் இருக்காது. சாப்பிடுவதற்கு 15 நிமிடத்துக்கு முன்பு நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும்.
பெரியவர்கள் 30 மிலி முதல் 50 மிலி வரையும், 1 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 மிலி முதல் 10 மிலி வரையும் குடிக்க வேண்டும். கசாயம் கசப்பாக இருப்பதால், கசாயத்தை குடித்த பின்னர் தேன், பனை வெல்லம், ஆடாதோடை மணப்பாகு போன்ற வற்றை கொடுக்கலாம், ஆனால் கசாயத்துடன் இவற்றை கலந்து கொடுக்கக்கூடாது. நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதுடன் உடலில் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது, சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.

டெங்கு கொசுக்களில் இருந்து தப்பிக்க:கொசுக்கடியில் இருந்து நம்மை காக்கும் மிகச்சிறந்த கிருமிநாசினியாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. எனவே டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிக்க நாம் இரவில் தூங்குவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெயை நமது முழங்காலில் இருந்து பாதம் வரை நன்றாக தடவிக் கொள்ள வேண்டும். மேலும் நம்மை தாக்கும் டெங்கு கொசுக்களால் அதிக உயரமாக பறக்க முடியாது.
எனவே டெங்கு கொசுக்கள் முழங்காலுக்கு மேல் கடிக்காது. இதனால் அதற்கு ஏற்றது போல நாம் இரவில் ஆடைகளை அணிந்துக் கொள்ள வேண்டும். இதனால் டெங்குக் காய்ச்சல் தொற்று நோய்களின் தாக்கம் ஏற்படாமல் மிகவும் எளிதாக விடுபடலாம்.

Sharing is caring!