தீவிர பக்தராக மாறிய ராம்லால்

“ராம்லால்”  என்பவர் பஞ்சாப்பைச் சேர்ந்தவர்.  மும்பையில் வசித்து வந்தார்,  எனினும் இவர் சாய்பாபாவை பற்றி அறிந்ததும் கிடையாது, தெரிந்ததும் கிடையாது.    இவர் கனவிலும் சாய்பாபா ஒரு நாள் பிரகாசமாகத் தோன்றினார் . தன்னை நேரில் வந்து சந்திக்குமாறு அவருக்கு ஆணையிட்டுவிட்டு மறைந்துவிட்டார்.

ராம்லாலுக்கு  இது  ஆச்சர்யமாக இருந்தது.

 யார் இந்தப் பெரியவர்?

எங்கிருக்கிறார் ?

 ஏன் தன்னைக் சந்திக்குமாறு கூறினார்?  இப்படிப் பலக் கேள்விகள் அவருள்ளே எழுந்தன . ஆனாலும் ,அவரை எப்படிச் சென்று தரிசனம் செய்வது என்பது மட்டும் ராம்லாலுக்குப் புரியவில்லை.  எனினும் கனவில் காட்சியளித்த அவரின் உருவம் மட்டும் அவர்  கண்களைவிட்டு அகலவே இல்லை .

இது போன்ற சூழலில் ஒரு நாள் கடை வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.  கடை ஒன்றில் ஒரு பெரியவரின் படம் இருந்தது.  அந்தக் கடையைத் தாண்டிச் சென்றவரின் கண்களை அந்தப் படம் கவர்ந்து இழுத்தது.  இந்தப் பெரியவரை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே என்ற எண்ணத்துடன் நின்றவருக்கு ‘சட்’ டென்று நினைவு வந்தது .

Sharing is caring!