துன்பங்கள் அண்டாமல் இருக்க இதை சொல்லுங்கள்

மனிதராகப் பிறந்து விட்ட நம் எல்லோருக்கும் ஏதாவது ஒரு கஷ்டம் மனதை வாட்டிக் கொண்டு இருக்கும். ஆனால் எத்தகைய துன்பத்தையும் போக்கும் இந்த துதியை அனுதினமும் பராசக்தியை மனதில் நினைத்து சொல்லிட மலை போல் வரும் துன்பங்கள் பனி போல் விலகிட காணலாம்.

ததியுறு மத்திற் சுழலும் என்ஆவி தளர்விலதோர்
கதியுறும் வண்ணம் கருது கண்டாய்; கமலாலயனும்,
மதியுறு வேணி மகிழ்நனும், மாலும் வணங்கிஎன்றும்
துதியுறு சேவடியாய்! சிந்துரானன சுந்தரியே.

பொருள்:

தாமரை மலரில் உறைகின்ற பிரமதேவனும், பிறைச்சந்திரனைச் சிரசில் தரித்த உன் பாதியாகிய சிவபிரானும், பாற்கடலில் பள்ளி கொண்ட திருமாலும், வணங்கி எந்நாளும் துதித்து மகிழும் செம்மைமிக்க திருவடிகளையும் செந்தூரத் திலகமணிந்த திருமுகத்தையும் கொண்ட பேரழகுமிக்க அன்னையே! தயிர் கடையும் மத்தைப் போல, பிறவிக் கடலாம் சுழலில் சிக்கி அலையாமல், ஒப்பற்ற பேரின் நிலைலை நான் அடையும்படி திருவுள்ளம் கொண்டருள்வாயாக!

Sharing is caring!