துல்லியமானது பல்லி பலன்களா? ஜோதிட பலன்களா?

சுப சகுணம் கண்டேன் வீட்டில் நல்லது நடக்க போகிறது என்று சொல்லும் அதே நேரம் கெட்ட கெட்ட கனவுகள் வருவதால்  சகுணம் எல்லாமே அசுபமாக இருக்கிறது என்று சொல்வார்கள் பெரியவர்கள்.. இந்த சகுணத்தை நடக்கும் நிகழ்வுகளை மட்டுமே  வைத்து கணிக்காமல்  ஊர்ந்து செல்லும் உயிரினமான பல்லியை வைத்தும் சொல்வார்கள்.

புராணத்தின் படி மிருகங்களும் ஆன்மிக ரீதியாக பல விஷயங்களை உணர்த்துவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்று பல்லி.. வீட்டில் இயல்பாக நடமாடும் இவற்றைக் கண்டு முகம் சுளிப்பது நம்முடைய வழக்கம் என்றாலும் போலி ஜோதிடர்களை விட  நடப்பதைத் துல்லி யமாக தெரிவிக்கும் சிறந்த  ஜோதிடனாக சொல்கிறார்கள் கெளளி சாஸ்திரம் பயின்றவர்கள்.. அதாவது பல்லியின் பலனை பற்றி படிக்கும் படிப்பு பல்லி சாஸ் திரம்…

பல்லி என்பது வெறும் ஊர்ந்து செல்லும்  உயிரினமாக மட்டுமல்லாமல்   ஜோதிட நீதியாக  நவக்கிரகங்களில் கேதுபகவானைக் குறிக்கிறது. கேதுவின் உடலானது அசுரனின் உடல் என்பதையும் நாம் முன்னரே அறிந்திருக்கிறோம்.. பல்லிகள் வீட்டிற்குள் வளர்க்கப்படுவதில்லை.. தானாகவே ஊர்ந்து ஒவ்வொரு வீடுகளிலும் வசித்துவருகிறது.

வீட்டிற்குள் அனைத்து இடங்களிலும் தாராளமாக புழங்கும் பல்லிகள் சத்தமிடுவது அந்த இடத்திற்கு ஏற்ப சுப  விஷயங்களையோ, அசுப விஷயங்கள் உண்டாவதையோ குறிப்பதைத் தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை வைத்து தீர்மானிக்கலாம். மேலும் நாம் பேசும் விஷயங்களின் போதும் பல்லிகள் சத்தமிட்டால்  அந்த விஷயங்கள் நல்லனவாக இருக்கும் பட்சத்தில் நல்ல வித மாக நடந்து முடிந்தால் அந்த இடத்தில் பல்லி சத்தமிடுவது நன்மையை உண்டாக் கும் என்பதையும், எதிராக நடந்தால் அபசகுணம் என்றும் எடுத்துகொள்ளலாம்..

பல்லி சத்தம் இடுவது போலவே  எதிர்பாராத விதமாக   உங்கள்  உடலின் மீது விழுந்தாலும் கூட பலன் உண்டு.. உச்சி முதல் பாதம் வரை பல்லி நம் உடலில் விழும் உறுப்புகளுக்கேற்ப பலன்களும் மாறுபடும்..  தலை, முடி, நெற்றி, புருவம், கன்னம், இடது கை, வலது கை, மணிக்கட்டு ., வலது கை, வலது கால்,  தொப்புள், தொடை, மார்பு, கழுத்து, வயிறு, பாதம் என்று அனைத்து இடங்களிலும்  விழுவதற்கு ஏற்ப சுப அல்லது அசுப பலன்கள் உண்டாகும் . இதை முன்கூட்டியே தெரிவிக்கும் ஆஸ்தான ஜோதிடனாகவே பல்லி விளங்குகிறது என்று சொல்லும் பெரியோர்கள் பல்லி விழும் பலன்களை உணர்ந்து தீய சகுணத்தை அறிவித்தால் உடனே குளித்து அருகில் உள்ள ஆலயங்களுக்குச் செல்ல வேண்டும். இல்லை யென்றால் வீட்டில் பூஜையறையில் விளக்கேற்ற வேண்டும். அப்படி செய்தால் நடப்பவை  இறைவனின் அருளால் நன்மையாகவே நடக்கும் என்று சொல்வார் கள்..

போலி ஜோதிடர்களை விட ஆஸ்தான துல்லிய கணிப்புமிக்க  பல்லியின் பலன் களை நம்பலாம். ஆனால் பல்லி விழும் பலன்களைப் பற்றிய விவரங்களைத் துல்லியமாக தெரிந்திருக்க வேண்டும்.. பல்லி விழும் பலன்களை பற்றி தனிகட்டுரையாக பார்க்கலாம்..

Sharing is caring!