தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்…!!!

இன்றைய கால கட்டத்தில் பலர் இரவு தூக்கத்தை பணிச்சுமை, உணவுப்பழக்கம், தொழில்நுட்ப வளர்ச்சி போன்றவற்றால் மிகவும் தாமதமாக மேற்கொள்கின்றனர்.

நாளடைவில் இந்த பழக்கம் அவர்களுக்கு தூக்கமின்மைக்கு ஆளாக்கும். இதனால் பல ஆரோக்கிய கோளாறுகளும் ஏற்படுகின்றன. இதற்காக தூக்க மாத்திரைகளை உட்கொள்ள ஆரம்பிக்கிறார்கள்.

மேலும் தூக்க மாத்திரைகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன என்பதை குறித்து இங்கு பார்ப்போம்.

தூக்க மாத்திரைகளின் பக்கவிளைவுகள்

தூக்க மாத்திரைகள் பகல் நேர தூக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இதனால் மனநிலையில் குழப்பம் ஏற்படும். பணிகளில் கவனம் செலுத்துவது சவாலாகவே இருக்கும்.

தூக்க மாத்திரைகள் தூக்க சுழற்சியை ஒழுங்குபடுத்துவதன் மூலம் இன்சோமேனியாவை குறைக்கிறது. இதனால் தலைவலி மற்றும் முதுகுவலி போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

இவை தூங்கும்போது சுவாசப்பாதையில் தடையை ஏற்படுத்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

தூக்க மாத்திரைகளை நீண்ட காலத்திற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் புற்றுநோய் உண்டாகும் அபாயம் ஏற்படும். இதிலுள்ள பல்வேறு வகையான சேர்மங்கள் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் நுரையீரல் புற்றுநோய் உண்டாகலாம்.

ஒரே நேரத்தில் அதிக அளவிலான தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வது கோமா அல்லது மரணத்தை கூட ஏற்படுத்தும்.

வயதானவர்களுக்கு இது அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில், இந்த மருந்து உடலில் கரைய அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் காலையில் எழுவது மிகவும் சிரமமானதாக இருக்கும்.

இதனால் உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவு குறையும். அத்துடன் நிம்மதியற்ற தூக்கமே கிடைக்கும்.

வலி நிவாரணிகளை பயன்படுத்துபவர்கள் தூக்க மாத்திரைகளை உபயோகிக்காமல் இருப்பது நல்லது. ஏனெனில் இரண்டு மருந்துகளும் இணையும்போது உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

தூக்க மாத்திரைகளை சாப்பிடவுடன் வாந்தி, குமட்டல், வேர்வை போன்ற அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக அதனை எடுத்துக் கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Sharing is caring!