தேங்காயில் உள்ள பூவை சாப்பிடலாமா?

பொதுவாக தேங்காய் பூவில் தேங்காயிலும் தேங்காய் தண்ணீரிலும் எவ்வளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றனவே அதைவிட மிக அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் இந்த தேங்காய் பூவில் உண்டு.

இந்த தேங்காய் பூவுக்குள் இருக்கின்ற அதிக அளவிலான ஊட்டச்சத்துக்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இரு மடங்காகக் கூட்டிவிடும்.

அதன்மூலம் பருவகால நோய் தொற்றுக்க்ளைத் தவிர்க்க முடியும். இதனை தொடர்ந்து சாப்பிட்டால் பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. இந்த பதிவை முழுமையாக படித்து அவற்றை அறிந்து கொள்ளுங்கள்.

மன அழுத்தம்

அதிக பணிச்சுமை உள்ளவர்கள் மன அளவிலும் உடலளவிலும் மிகவும் சோர்வாகக் காணப்படுவார்கள். அப்படி இருக்கும்பாழுது தேங்காய் பூவை சாப்பிட்டால் உடலுக்கு அதீத எனர்ஜி கிடைக்கும். நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க முடியும்.

ஜீரணத்தை அதிகமாக்க

அஜீரணக் கோளாறு உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த நிவாரணியாக இந்த தேங்காய் பூ இருக்கும். இந்த தேங்காய் பூவில் உள்ள மினரல்களும் வைட்டமின்களும் குடலுக்குப் பாதுகாப்பு அளித்து மலச்சிக்கலைப் போக்குகிறது. அஜீரணத்தை விரட்டியடிக்கிறது.

நீரிழிவு

இந்த தேங்காய் பூவில் இன்சுலின் சுரப்பைத் தூண்டுகின்ற அபார சக்தி இருக்கிறது. அதனால் அடிக்கடி இந்த தேங்காய் பூவை சாப்பிடுவதனால் உங்களுடைய ரத்தத்தில் உள்ள அதிக அளவிலான சர்க்கரையைக் கட்டுப்படுத்தப் பெரிதும் இந்த தேங்காய் பூ பயன்படுகிறது.

இதய நோய்கள்

இதயக் குழாய்களில் படிகின்ற கொழுப்புகள் மாரடைப்பையும் வேறு சில இதயம் தொடர்பான நோய்களையும் உண்டாக்குகிறது. இந்த கொழுப்பு தேங்கும் பிரச்சினையை சரிசெய்வதிலும் மிக சிறப்பாக தேங்காய் பூ செயல்படும்.

புற்றுநோய்

புற்றுநோய் செல்களைத் தூண்டுகின்ற ஃப்ரீ ரேடிக்கல்ஸை நம்முடைய உடலில் இருந்து வெளியேற்றும் ஆற்றலை இந்த தேங்காய் பூ கொண்டிருக்கிறது. இது நமக்கு புற்றுநோய் உண்டாகாமல் காக்கிறது.

Sharing is caring!