தேனை எப்படி எதனுடன் கலந்து சாப்பிட்டால் நல்லது ?

தேன் இயற்கை நமக்கு தந்த பல அருட்கொடைகளுள் ஒன்றாகும். பழங்காலம் தொட்டே தேனை நாம் பயன்படுத்தி வருகிறோம்.

ஏனெனில் இது பல வகையில் உடலுக்கு நன்மை தருகின்றது. அது ஒரு மிகச்சிறந்த மருத்துவ குணம் கொண்டதாகும்.

70 வகையான வைட்டமின் சத்துக்கள் சுத்தமான தேனில் அடங்கியுள்ளன. தேன் எண்ணற்ற சத்துக்களை இயற்கையாகவே கொண்டுள்ளது.

தேனில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் ஏராளமாக உள்ளது மற்றும் காயங்களை சரிசெய்யும் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அடங்கியுள்ளன.

அதுமட்டுமின்றி தேன் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்றதும் கூட. ஏனெனில் இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். மேலும் தேன் சளி, இருமல் போன்றவற்றில் இருந்து விடுவிக்கும்.

தேனை சில பொருட்களுடன் கலந்து சாப்பிட்டால் உடலில் உள்ள பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாகுகின்றது.

அந்தவகையில் தேனுடன் எதை கலந்து சாப்பிட்டால் நல்லது என இங்கு தெரிந்து கொள்ளுவோம்.

 • சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன் இரண்டு ஸ்பூன் தேன் சாப்பிட்டால் நெஞ்சு எரிச்சல், வயிற்றுக் காந்தல், அல்சர் குறையும்.
 • கேரட்டை மிக்ஸியில் சாறு எடுத்து தேன் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை குறையும்.
 • இஞ்சியைத் தட்டி சாறு எடுத்து தேன் கலந்து குடித்தால், பித்தம் குறையும்.
 • மாதுளம்பழ ஜூஸுடன் தேன் கலந்து சாப்பிட்டால் மலச் சிக்கல் நீங்கும்.
 • 1 வயது தாண்டிய குழந்தைகளுக்கு தினமும் 1 ஸ்பூன் தேன் கொடுத்தால் நல்ல பசி எடுக்கும்.
 • இரண்டு ஸ்பூன் தேனோடு, மூன்று ஸ்பூன் கிராம்புத்தூள் டீயூடன் கலந்து குடித்தால், கொலெஸ்ட்ரால் இரத்தத்தில் குறையும்.
 • தேனை கேரட் சாறுடன் கலந்து காலை ஆகாரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் பருகினால் கண் பார்வை விருத்தியடையும்.
 • தேன் மற்றும் இஞ்சி சாறு கலந்து அருந்தினால் இருமல், தொண்டை வலி, மார்பு சளி, மூக்கு ஒழுகுதல் மற்றும் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
 • அரை கிராம் கருப்பு மிளகை பொடி செய்து சரியளவு தேன் மற்றும் இஞ்சி சாறுடன் கலந்து அருந்த ஆஸ்துமா குணமாகும்.
 • ஒரு தேக்கரண்டி அளவு பூண்டு சாறுடன் இரண்டு கரண்டி தேன் சேர்த்து சாப்பிடுவது இரத்த கொதிப்புக்கு சிறந்த மருந்தாகும்.
 • இரவில் தூங்கும் முன் சூடான பசும் பாலில் தேன் கலந்து குடித்தால், நல்ல ஞாபக சக்தி உண்டாகும்.

Sharing is caring!