தேவி சித்ராவை வணங்க அதிர்ஸ்டம் கைகூடும்

நீங்கள் அதிர்ஷடத்தை நம்புபவர்களா? அப்படியானால் சித்ராதேவியை வணங் குங்கள். கை நழுவிய அதிர்ஷ்டமும் கைகூடி வரும். கடவுளின் அனுக்கிரகம் இருந்தால் தான் அதிர்ஷ்டமும் கிடைக்கும் என்பது முன்னோர்களது கணிப்பு. அத்தகைய அனுக்கிரகத்தை அளிக்கக் கூடியவள் இவள் ஒருத்தியே… எத்த கைய வேதனைகளையும் தாங்கும் மனோபாவம் வெகு சிலருக்கே உரியது. சிறிய துயரத்தையும் ஆற்றமாட்டாமல் கண்ணீரால் கழுவி இறைவனை சரண டையும் இளகு மனம் படைத்தவர்களும் இருக்கிறார்கள்.

அத்தகைய தாங்க முடியாத துன்பங்களைக் கொண்டிருப்பவர்கள் மனதில் இருக்கும் எதிர்மறை யான எண்ணங்களை அழிக்கவும், பேரின்பம் அடையவும் திதி நித்யா தேவி களில் சித்ரா தேவியை சரணடையலாம். வாழ்வில்  செல்வத்தையும் பேரின் பத்தையும் குறையாமல் பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் திதி நித்யா தேவியில் சித்ராதேவியை சரணடையலாம்.

அம்பிகையுடன் ஸ்ரீ சக்கரம் வைத்து கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால் திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். நீங்கள்  பெளர்ணமி அல்லது தேய்பிறை பிரதமை  திதியில் பிறந்திருந்தால் உங்களுக்குரிய திதி நித்யா தேவி சித்ரா. அன் றைய தினம் வீட்டில் விளக்கேற்றி சித்ராவை வணங்கினால் துன்பங்கள் பறந்தோடும். செல்வமும், பேரின்பமும் குறைவின்றி கிடைக்கும். அதிர்ஷ் டத்தை நம்புபவர்கள் சித்ராதேவியை வணங்கலாம்.

சித்ரா :
திதி நித்யாதேவிகளில் பதினைந்தாம் இடத்தை அலங்கரிப்பவள் இவள். வெண்பட்டாடை உடுத்தி பலவித ஆபரணங்களை தேகத்தில் உடுத்தி அழகே உருவாய் வீற்றிருப்பவள். பளபளவென மின்னும் கிரணங்களை வீசிடும் திரு மேனியைக் கொண்டவள். பாசம்,அங்குசம், அபயம், வரதம் தரித்த நான்கு திருக்கரங்களுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறாள். அழகே வடிவாகி அருள் தருபவளான இவள் சர்வானந்தமாயி என்னும் நிலையானவள். பக்தர்களின் உள்ளத்தில் ஞானதீபம் ஏற்றும் தனிப்பெரும் பரும்பொருளாய் திகழ்கிறாள் திதி நித்யாதேவியான சித்ரா.

மூலமந்திரம்:
ஓம் விசித்ராயை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவிப்ரசோதயாத்.

Sharing is caring!