தொண்டை கட்டினா உடனே மருத்துவரை அணுகுங்கள்?..

சில பேர் நன்றாகத்தான் பேசிக் கொண்டு இருப்பார்கள். ஆனால் திடீரென்று அவர்களால் பேச முடியாமல் ஏன் மூச்சு கூட விட முடியாமல் சிரமம் ஏற்படக் கூடும். இதற்கு காரணம் சுவாசப் பாதையில் ஏற்படும் அடைப்பால் இந்த பிரச்சினை உண்டாகிறது. நாம் சாப்பிடும் உணவுப் பொருட்கள் அல்லது வேறு பொருட்கள் மேல் சுவாசப் பாதையை அடைத்துக் கொள்வதால் அந்த நபரால் சுவாசிக்க முடியாமல் போகிறது.

இந்த சோக்கிங் (அடைப்பு பிரச்சினை) உயிருக்கே உலை வைத்து விடும். எனவே உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. உணவுத் துண்டுகள், பொருள் அல்லது உண்ணும் திரவப் பொருட்கள் தொண்டை யை அடைத்து விடும். இந்த பிரச்சினை யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்.

தொண்டைக்கட்டு

பெரியவர்கள் வேகமாக உணவை விழுங்கும் போது, தண்ணீர் குடிக்கும் போது அதே மாதிரி சின்ன குழந்தைகள் எதாவது பொருட்களை வாயில் போடும் போது இந்த அடைப்பு பிரச்சினை ஏற்படுகிறது. எப்பொழுதும் இந்த அடைப்பால் உயிருக்கு ஆபத்து என்று கூற இயலாது. ஆனால் சில சமயங்களில் உயிருக்கு ஆபத்து நேரிடலாம். அடைப்பு பாதியாக இருந்தால் சுவாச பாதை வழியாக சிறுதளவு ஆக்ஸிஜன் நுரையீரலுக்கு செல்ல வாய்ப்புள்ளது. தொண்டை அடைப்பு முழுவதுமாக ஏற்படும் போது ஆக்ஸிஜன் ஏதும் செல்லாமல் உடல் உறுப்புகள், திசுக்கள் அனைத்தும் பாதிப்படைய கூடும். இதற்கு அஸ்பைஷியா என்று பெயர்.

எதிர்பாராத இறப்பு

2017 ஆராய்ச்சி படி இந்த அடைப்பு பிரச்சினை தான் எதிர்பாராத இறப்பை தரக் கூடிய ஒன்றாக நான்காவது இடத்தில் உள்ளது. 5051 பேர்கள் அடைப்பு பிரச்சினையால் இறக்கின்றனர் என்று அதிர்ச்சி ரிப்போர்ட் கூறுகிறது . இதில் 2848 பேர்கள் 74 வயதை அடைந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே மாதிரி 1 வயதை அடைந்த குழந்தைகளும் இதன் மூலம் இறப்பை சந்தித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரியவர்களுக்கான அறிகுறிகள்

பேச முடியாமல் திணறுதல் திடீர் பீதியடைதல் மூச்சு விடுவதில் தடை, இளைப்பு போன்றவை ஏற்படுதல் மூச்சு விடும் போது சத்தம் எழும்புதல் வலியுடன் இருமல் பழுப்பு அல்லது நீல நிறத்தில் சருமம் மாறுதல் நினைவை இழத்தல் வாந்தி வலியால் தொண்டை அல்லது வாயை பிடித்தல் குழந்தைகளுக்கான அறிகுறிகள் குழந்தைகளுக்கு இந்த தொண்டை அடைப்பு பிரச்சினை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகி விடுவது நல்லது. மூச்சு விட சிரமம் தொடர்ந்து அழுகை மற்றும் இருமல்

விளைவுகள்

சோக்கிங் (அடைப்பு பிரச்சினை) 5 வகைகளாக பிரிக்கப்படுகிறது. மெக்கானிக்கல், நியூரோலாஜிக்கல், மஸ்குலோஸ்கெலிட்டல், இம்பினோலாஜிக்கல், தொற்று

இந்த அடைப்பு நிலையில் சாப்பிடும் போது உணவு விழுங்கப்படுவதில் அடைப்பு ஏற்படுகிறது. பெரிய பொருட்களை விழுங்குதல், பேசுதல் அல்லது சிரித்தல், சாப்பிடும் போது, வேகமாக சாப்பிடுதல் போன்றவற்றால் சுவாச பாதையில் அடைப்பு ஏற்படும்.

மூளையில் உள்ள நரம்புகளில் பாதிப்பு ஏற்படுவதால் தொண்டை மற்றும் வாய் தசைகள் சரியாக செயல்பட முடியாமல் போய் விடும். வேறு நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் அடைப்பை ஏற்படுத்தும்.

தொற்று

வைரல் தொற்று போன்றவற்றால் கூட சுவாச பாதை வீக்கமடைந்து அடைப்பு ஏற்பட நேரிடும்.

பெரியவர்கள் வயதாகும் போது பல்லமைப்பு சரியாக இல்லாமல் இருத்தல், ஆல்கஹால் எடுத்துக் கொள்வது இந்த தொண்டை அடைப்பு பிரச்சினை யை ஏற்படுத்தி விடும்.

இளம் வயதினர் ஆல்கஹால் அருந்துதல், போதை மருந்து எடுத்தல், உணவு உண்ணுதல், பர்கின்சர் நோய் போன்றவற்றாலும் அடைப்பு பிரச்சினை ஏற்படும்.

சிறியவர்கள் கீழ்க்கண்ட இந்த பொருட்களை விழுங்கும் போது அடைப்பு பிரச்சினையை சந்திக்கின்றனர் மிட்டாய் நிலக்கடலை முழு திராட்சை பெரிய துண்டு பழங்கள், காய்கறிகள் பாப்கார்ன் பென்சில், இரப்பர் சிறிய பொம்மை பாகங்கள் சிறிய சிறிய கீ செயின்

அபாயங்கள்

3 நிமிடங்களுக்கு மேல் சுவாசிக்க முடியவில்லை என்றால் மூளை பாதிப்பு அடைய வாய்ப்புள்ளது தொண்டை எரிச்சல் மற்றும் வலி 6-8 நிமிடங்கள் சுவாசிக்காமல் இருக்கும் போது இறப்பு நேரிடும்

முதலுதவி

உங்களை சுற்றி இருக்கும் பெரியவர்களுக்கு, குழந்தைகளுக்கு யாருக்கு வேண்டும் என்றாலும் இந்த அடைப்பு பிரச்சினை ஏற்படலாம். எனவே அதற்கான முதலுதவி சிகிச்சை பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது. ஹெய்லிச் சூழ்ச்சி முறையை முதலில் கையாள வேண்டும். கொஞ்சம் தண்ணீர் குடிக்கும் போது அடைத்துள்ள பொருளுக்கு அழுத்தத்தை கொடுத்து தள்ளி விட முடியும்.

முதலில் நீங்கள் செய்ய வேண்டியது 5-5 முறையை கையாள வேண்டும் என்று அமெரிக்க ரெட் கிராஸ் கூறுகிறது. 5 பேக் ப்ளெவ்ஸ், ஹெய்லிச் சூழ்ச்சி நல்ல பலனை தரும். இந்த முதலுதவி சிகிச்சய ை நன்றாக பயிற்சி எடுத்த பிறகு செய்வது நல்லது.

சிகிச்சைகள்

ஹெமிலிக் சூழ்ச்சி அல்லது CPR எதிர்பார்க்கப்பட்ட பலனை அளிக்க வில்ை என்றால் லாரின்கோஸ்கோப் அல்லது பிராஞ்சோஸ்கோப் மூலம் கேமரா மூலம் தொண்டையில் அடைத்துள்ள பொருள் நீக்கப்படும். சில சமயங்களில் அறுவை சிகச்சைகள் மேற்கொள்ளப்படுகிறது. க்ரைக்கோதைரோடோமி அல்லது ட்ராச்சோடோமி மூலம் நோயாளியின் தொண்டையில் கீறி அதன் வழியாக குழாய் விட்டு மூச்சு விட ஏற்பாடு செய்யப்படும். அடைத்துள்ள பொருள் நீக்கப்படும்.

Sharing is caring!