தொப்பையை ஓட ஓட விரட்டும் உணவு!

இன்றைய பரபரப்பான உலகத்தில் நாம் செய்யும் பல்வேறு வேலைகளுக்கு நேரம் என்பதே போதுமானதாக இருப்பதில்லை.

இந்த களேபரத்தில் நாம் சரியான உணவை, சரியான நேரத்தில் பெரும்பாலும் சாப்பிடுவதில்லை. இதனால் பல ஆபத்துக்களை சந்திக்க நேரிடுகிறது.

எனினும் காலை உணவு மிக மிக அவசியமான ஒன்று. துரிதமாக உண்ண வேண்டுமானால் ஓட்சினை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.

நொடிப்பொழுதில் தயார் செய்து சாப்பிட்டு விடவும் செய்யலாம்.

உடல் எடையை குறைக்க படாத பாடுபடுபவர்களுக்கு ஓட்ஸ் ஒரு சிறந்த காலை உணவாக விளங்குகிறது.

ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்கவும் இது உதவிடும். வளமையான புரதம் மற்றும் நார்ச்சத்தை இது கொண்டுள்ளதால், இது உங்கள் வயிறை நிறையச் செய்து உங்களை திருப்தியாக்கும்.

மற்ற தானியங்களை விட ஓட்ஸ் உங்கள் வயிற்றை அதிகமாக நிறையச்செய்யும் என 2013 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.

சுவைமணம் இல்லாத ஓட்ஸை, ஓட்ஸ் கலந்த குளிர்ந்த தானியங்களுடன் ஒப்பிட்டு பார்த்த போது, சுவைமணம் இல்லாத ஓட்ஸே வயிற்றை அதிகமாக நிறையச் செய்து, ஆற்றலை அதிகரிக்க மற்ற உணவை நாடுவது குறைந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். இதனால், உடல் எடை மற்றும் தொப்பையில் இருந்து நீங்கள் தப்பிக்கலாம்.

இதேவேளை, பெண்கள் அழகாக, இளமையாகத் தோன்ற ஓட்ஸ் உணவுடன் 50 கிராம் பச்சை வெங்காயத்தை பச்சையாக உணவில் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

கோதுமையும், பாதாம் பருப்பையும் ஓட்ஸ் சாப்பிடும்போது சேர்த்துச் சாப்பிடவும், இதனால் கோபமும், கவலையும் பறந்து போகும் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஓட்ஸ் உணவானது குதிரையின் நரம்பு மண்டலத்தைப் போல மனிதனின் மத்திய நரம்பு மண்டலத்தையும் இது கிளர்ச்சியுடன் வைத்திருக்கிறது. எனவே தினசரி ஒரு கப் ஓட்ஸ் உணவை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானது.

Sharing is caring!