தொப்பையை கரைக்கும் ஆரஞ்சு பழத்தோல்

எடையைக் குறைக்க வேண்டுமா இதோ ஒரு மாபெரும் மந்திர யுக்தி இருக்கிறது. பழங்கள் தேவலோக தேவாமிர்தத்தின் புலோகச் சிதறல். கனிகளைக் காலம் முழுவதும் உண்பது, தேவலோக அமுதத்தை அருந்துவற்கு ஒப்பானதாகும்.

எந்த சுவையான கனியானாலும் அதை காக்க கடுமையான அல்லது மென்மையான தோல்கள் அக்கனியைக் சுற்றி இருக்கும். இத்தகைய தோல்கள் பழங்களின் மென்மையான உட்புறத்தைக் காத்து நிற்கும்.

கனிகளில் அதீத சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில் சில கனிகளில் படர்ந்திருக்கும் தோல்களில் கனியை விட அதிக அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருக்கும்.

ஆரஞ்சுப் பழங்கள்

உலகின் பல பகுதிகளில் பலவிதமான கனிகள் கிடைக்கின்றன. சில பழங்கள் பரவலாக பல இடங்களில் கிடைக்கும். சில கனிகள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன.

இத்தகைய அற்புத பழத்தில் வைட்டமின்-சி சத்து நிரம்பியுள்ளது. அதைத் தவிர இயற்கை சர்க்கரையும் நிரம்பியுள்ளது. ஆரஞ்சின் தோலில் பழத்தில் உள்ளாதை விட அதிகளவில் பல சத்துக்கள் இருக்கின்றன.

ஆரஞ்சின் தோலை மட்டுமே கொண்டே உடலின் எடையை குறைக்க முடியும்.

ஆரஞ்சு தோல்களில் அபரிமிதமான நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பதற்கான மிக சரியான வரப்பிரசாதமாக விளங்குகிறது. இதனை உட்கொண்டால் வயிற்றில் வெகு நேரம் இருந்து பசிக்காமல் செய்கிறது. இதனால் உடல் எடை குறைவது உறுதி.

Sharing is caring!