தொப்பையை குறைக்கும் சீரக இஞ்சி நீர்

இன்று பலரின் பெரும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை கூடுதல் தான். இது ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இருக்க கூடிய மிக மோசமான தொல்லையாக உள்ளது. உணவு கட்டுப்பாடு இல்லையென்றால் குறிப்பாக இந்த நிலை ஏற்படும்.

உடல் எடை கூடி கொண்டே போவதால் இதய கோளாறு, சர்க்கரை நோய் போன்றவை வர கூடும்.

இதன் தாக்கத்தால் தொப்பையும் அளவுக்கு அதிகமாக பெரிதாகி கொண்டே போகிறது. தொப்பையை சரி செய்ய இனி நீங்கள் இந்த சீரக-இஞ்சி நீரை குடித்த வந்தாலே போதும்.

வெறும் 10 நாட்களிலே உங்களின் தொப்பையை இந்த நீர் குறைந்து விடும்.

எவ்வாறு தயார் செய்வது?
  • தேவையான பொருட்கள்
  1. இஞ்சி சிறு துண்டு
  2. சீரகம் 1 ஸ்பூன்
  3. எலுமிச்சை சாறு 1/2 ஸ்பூன்
செய்முறை

500 ml நீரில் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். பின், மறுநாள் காலையில் அந்த நீரை வடிகட்டி கொண்டு, அதனுடன் இஞ்சியை துருவி அல்லது நசுக்கி போடவும்.

250 ml வரும்வரை இந்த நீரை கொதிக்க விட்டுஇறக்கி கொள்ளவும். இந்த நீருடன் எலுமிச்சை சாற்றை சேர்த்து, தொடர்ந்து 10 நாட்கள் குடித்து வந்தால் உங்கள் தொப்பை குறைந்து விடும்.

கலோரிகளை கரைக்க

அளவுக்கு அதிகமாக சேர்ந்துள்ள கொழுப்புகளும், கொலஸ்ட்ராலும் தான் இந்த நிலைக்கு நம்மை தள்ளி விட்டுள்ளது.

மேலும், அதிக படியான கலோரிகளை கரைப்பதற்கு ஓடவோ, பெரிய பெரிய ஜிம் சாதனங்களை பயன்படுத்துவதை காட்டிலும் இந்த சீராக இஞ்சி நீர் எளிதில் குறைத்து விடுகிறது.

Sharing is caring!