தொப்பையை குறைக்க வேண்டுமா?

இன்று தொப்பையை குறைக்க முடியமால் பலரும் அவதிப்படுவதுண்டு. இதற்கு என்னத்தான் கடின உடற்பயிற்சிகள் செய்தாலும் சில உணவுளை உட்கொண்டாலும் தான் எளிதில் தொப்பை குறைக்க முடியும்.

இதற்கு முட்டை பெரிதும் உதவி புரிகின்றது. ஏனெனில் கலோரிகள் குறைவு என்பதால், இது உடல் எடையைக் குறைக்க உதவி புரிகின்றது.

அந்தவகையில் முட்டையை எப்படி சாப்பிட்டால் உடல் எடையை குறைக்க முடியும் என்பதை பற்றி பார்ப்போம்.

எப்படி சாப்பிடலாம்?

முட்டையை காலை உணவாக உட்கொள்ள நினைத்தால், அந்த முட்டையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து சமைத்து உண்ணுங்கள். இதனால் சரியான அளவில் நல்ல கொழுப்புக்கள் உடலுக்கு கிடைத்து, உடல் எடையும் குறையும்

மதிய வேளையின் போது, உடைத்துவிட்ட முட்டைக் குழம்பை நவதானிய மாவால் தயாரிக்கப்பட்ட ரொட்டியுடன் சேர்த்து சாப்பிடலாம். இல்லாவிட்டால், உங்களுக்கு பிடித்த சில காய்கறிகளை முட்டை பர்ஜியுடன் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

காலை உணவிற்கு பின் மதிய உணவிற்கு முன் பலருக்கும் பசி எடுக்கும் நேரத்தில் ஒரு பௌல் ஓட்ஸை சாப்பிடலாம். இது உடல் எடையைக் குறைக்க உதவும். ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஓட்ஸை சாப்பிட்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும்.

எத்தனை நாட்கள் சாப்பிடலாம்?

முட்டை சமையலை வாரத்திற்கு 3-4 நாட்கள் சாப்பிடலாம்.

இதர நாட்கள் கடலை மாவால் தயாரிக்கப்படும் கலோரி குறைவான சமையலை சாப்பிடலாம். ஏனெனில் கடலை மாவு உடல் எடையைக் குறைக்க உதவும்.

ஒரு நாளைக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்?

ஒரு நாளைக்கு 3 முட்டை வரை சாப்பிடலாம். குளிர்காலத்தில் வேண்டுமானால் 4-5 முட்டை வரை சாப்பிடலாம்.

குறிப்பு – வெறும் முட்டையை மட்டும் சாப்பிட்டால், உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய சத்துக்கள் கிடைத்துவிடாது. ஆகவே முட்டை சாப்பிடும் நாட்களிலும், பச்சை காய்கறிகள், பழங்கள் மற்றும் முழு தானியங்களையும் சாப்பிட வேண்டும்.

Sharing is caring!