தொப்பையை குறைக்க….

உடல் பருமன் எல்லா பிரச்சனைகளுக்கும் மூலகாரணம். ஆரோக்கியத்தின் மீது சற்றும் அக்கறையில்லாமல் இருப்பதால்தான் உடல் பருமன் உண்டாகிறது.

இது தவிர மரபு ரீதியாகவும் ஹார்மோன் பிரச்சனையாலும் உடல் பருமன் உண்டாகும் வாய்ப்புகல் உண்டு. இவர்கல் தக்க மருத்துவரை நாடி கட்டாயம் சிகிச்சை எடுத்து சரிப்படுத்த வேண்டும்.

உடல் பருமனை குறைக்க இங்கே கூறப்பட்டிருக்கும் உணவுகள் உங்களுக்கு உதவும். முயற்சி செய்து பாருங்க.

முட்டை :
முட்டை மிகச் சிறத் உணவு. உண்மையில் முட்டையில் புரதம், கொழுப்பு, மினரல், விட்டமின் என பலவித அனைத்து சத்துக்களும் உள்ளன.

தினமும் முட்டை சாப்பிட்டால் உடல் எடை கொழுப்பு குறையும். உண்மையில் மஞ்சள் கருவில் அனைத்து மிக முக்கிய சத்துக்களும் உள்ளது. கொழுப்பு இருந்தாலும் அவை பாதகம் தராது. (நாட்டு முட்டை)

கொள்ளு
கொள்ளுப்பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச் சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது.

பீன்ஸ் :
பீன்ஸில் அதிக நார்சத்து கொண்டவை. வாரம் ஒரு நாட்கள் பீன்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். உடல் கொழுப்பை குறைக்கும். நச்சுக்களை வெளியேற்றும்.

பாசிப் பருப்பு :
பாசிப்பருப்பு தொப்பையை குறைக்கும். வயிற்றிலுள்ள கொழுப்பை குறைபதில் முக்கிய பங்கு கொண்டது. தினமும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பாதாம் :
பாதாமை ஊற வைத்து சாப்பிடுங்கள் . அதிக புரதம் நார்சத்து கொண்டது. கொழுப்பை கரைக்கும். சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

தக்காளி :
அதிக ஆன்டி ஆக்ஸெடென்ட் மற்றும் விட்டமின் ஏ, சி கொண்டது. தினமும் அதிக தக்காளியை உபயோகப்படுத்துங்கள்.தக்காளி சூப் தக்காளி ஜூஸ் ஆகியவை குடிக்கலாம். இதனால் கொழுப்பு வேகமாக கரைந்து உடல் எடை குறையும்.

பனீர் :
பனீர் மசாலா கலக்காமல் எண்ணெயில் பொறிக்காமல் தனியாக சாப்பிடுவது நல்லது. இதில் அதிக புரதம் , கால்சியம் உள்ளது. கலோரி குறைந்த உணவு இது

 

Sharing is caring!