தொழிலில் இருக்கும் இடையூறுகள் அகலவும் செல்வம் பெருகவும் உதவும் திருத்தலம்…

1008 சிவத்தலங்களில் அனைத்து அம்சங்களையும் பெற்று  விளங்கும் சிவத்தலமாக இருக்கிறது தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டம் விரிஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள மார்க்கபந்தீஸ்வரர் கோவில். 1300 வருடங்களுக்கு  முந்தைய பழமையான கோவில் இது. விஷ்ணு, பிரம்மா, கரன் போன்ற தெய்வங்கள் பூஜித்த தலம். மூலவர் மார்க்கபந்தீருவரராச சிவபெருமான் தாயார் மரகதாம்பிகை அம்மாள்.

என்  திருமுடி திருவடி காணுங்கள் என்ற சிவபெருமானின் கூற்றை கேட்டு பிரம்மா திருமுடி காண முயற்சித்தும் அது முடியாமல் போனது. அப்போது பிரம் மன் பொய் உரைத்ததால் சிவபெருமானின் சாபத்துக்கு உள்ளானார். அந்த சாபத்தை நீக்க பூலோகத்தில் மனித பிறவியாக அவதாரம் எடுத்த பிரம்ம தேவனுக்கு இங்கு சிவப்பெருமானே தனது திருமுடியை வளைத்து அருளியதாக இத்தல புராணம் கூறுகிறது. இத்தல மூலவர் சுயம்பு லிங்கமாக சற்று சாய்ந்த கோணத்தில் காட்சியளிக்க காரணம் பிரம்மாவுக்கு திருமுடி காண சிவபெருமான் தலையைக் குனிந்ததே என்று விளக்குகிறார்கள்.

பிரம்மாவுக்கு சிவபெருமான் உபநயனம், பிரம்மோபதேசம், சிவ தீட்சை 4 வேதங் கள், 6 சாஸ்திரங்கள், 18 புராணங்கள் மற்றும் 64 கலைகளை போதித்தார். அதனால் இத்தலம் உயர்ந்த தலமாக போற்றப்பட்டுள்ளது. இக்கோயிலின் தீர்த்தம் சிம்மக் குளம் தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. ஆதிசங்கரர் இத்தீர்த்தத்தில் பீஜாட்சர யந்திரத்தை  பிரதிஷ்டை செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குழந்தை வரம் வேண்டி தவம் செய்வர்கள் சிம்மத்தீர்த்தத்தில் நீராடி ஆலயத்தில் தங்கி இரவில் ஈசனைக் கண்டால் விரைவில் குழந்தைப் பேறு பெறுவார்கள் என்பது ஐதிகம். மேலும் பில்லி, சூனிய, ஏவல்கள், தீயசக்திகள் அண்டியவர்கள் இத்தீர்த்தத்தில் மூழ்கினால் பிடித்திருந்த பீடைகள் ஓடி போகும். தொழிலில் இருக்கும் இடையூறுகளை நீக்கி தொழிலில் முன்னேற்றமடைய உதவுகிறது இந்த சிம்மதீர்த்தம்.  இவை தவிர  சூலி தீர்த்தம், சோம தீர்த்தமும் இங்குண்டு.

தேவர்கள் தினமும் இத்தலத்துக்கு வந்து இறைவனை வழிபடுவதாக சொல்கிறார்கள். அதனாலேயே இக்கோயிலின் வடக்கு கோபுர வாயில் வருடம் முழுக்க அனைத்து நாட்களும் திறந்த நிலையில் வைக்கப்படுகிறது. கருவறை சதுரம், வட்டம்,  முக்கோணம் என்னும் 3 வித அம்சங்களில் அமைய வேண்டும். சதுர  அமைப்பு தேவ லோகத்துக்கு உரியது என்பதால்  ஆலயங்களில் சதுர அமைப்பில் தான் கருவறை இருக்கும். ஆனால் இத்தலத்தில் மட்டும் கரு வறையானது  ஓங்கார வடிவத்துடன்  இதயம் போன்று  காணப்படுவது ஆச் சரியமளிக்கிறது. ஒரே  பெரிய லிங்கத்தின் உடலில்  1008 சிவலிங்கங்கள் இத் திருத்தலத்தில் அமைந்திருப்பது  இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று.
இத்தலத்தின் மற்றுமொரு சிறப்பு  காலம் கட்டும் கல். அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6 வரையும், 6 முதல் 12 வரையும் எண்கள் அந்தக் கல்லில் செதுக்கப்பட் டுள்ளன. அக்கல்லின் மேல்புறத்தில் உள்ள  பள்ளத்தின் வழியே ஒரு குச்சியை நீட்டினால்  அந்த  நேரத்துக்குரிய நிழல் குறிப்பிட்ட எண்ணில் வந்து விழும்.  கோவிலின் தென்புறத்தில் இந்த காலம் கட்டும் கல்   அமைக்கப்பட்டிருக்கிறது.

திருவாரூர் அழகு தேர் என்றால் திருவிரிஞ்சிபுரம் மதிலழகு கொண்டது.  இத் தலத்தின் மதில்கள் மிகவும் உயரமாக இருக்கிறது. கோவிலின் சுவர்களிலும் தூண்களிலும் அழகிய சிற்ப வேலைபாடுகள் நிறைந்திருக்கிறது. இக்கோவிலைப் பற்றிய கல்வெட்டு குறிப்புகளில்  சோழர்கள்  இத்தலத்தில் புதையலை மறைத் திருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது. அதிசயங்கள் நிறைந்த கோவிலை நேரம் இருக்கும் போது தரிசித்து வாருங்கள்.

Sharing is caring!