தோஷங்கள், வினைகள் தீர்க்கும் நித்யா தேவி

செய்தொழிலில் ஏற்படும் தடைகளை நீக்க, நீயே அபயம் என்று, நித்யா தேவியின் தாழ் பணிந்தால், தடைகள் அனைத்தும் தவிடுபொடியாகும். விலகிப் போன ஐஸ்வர்யங்கள் அனைத்தும் தேடி வரவும், அனைத்து விதமான தோஷங்கள் நீங்கவும், நித்யா பரிபூரணமாக அருள் புரிகிறாள்.

உடல் ஆரோக்கியம் குன்றாமல் இருக்கவும்,வினைகளைத் தீர்க்கவும் மனமுறுகி நித்யா தேவியை வணங்கினால், இல்லையென்று சொல்லாமல் அபயம் அளிக்கிறாள் நித்யா தேவி.

நீங்கள் பிறந்ததேதிக்கு உரிய திதி நித்யாதேவியை, அந்த திதி நாளில், ஸ்ரீ லலிதாம்பிகையுடன், ஸ்ரீ சக்கரம் வைத்து  கொடுத்திருக்கும் மூலமந்திரத்தை ஒரு வருடம் சொல்லி வந்தால், திதி சூனியம் நீங்கி வாழ்வில் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும்.

நீங்கள்  வளர்பிறை தசமி அல்லது தேய்பிறை ஷஷ்டி திதியில் பிறந்திருந்தால், உங்களுக்குரிய திதி நித்யா தேவி நித்யா.  அன்றைய தினம், வீட்டில் விளக்கேற்றி, நித்யாவை வணங்கினால் வினைகளை நீக்கி தோஷங்களைப் போக்கி அருள்புரிவாள்.

நித்யா:
திதி நித்யாதேவிகளில், பத்தாவது இடத்தில் வாசம் செய்கிறாள், ஜ்வாலா மாலினி நித்யா. பத்மம் என்னும் தாமரையின் மேல், நின்ற கோலத்தைக் கொண்டிருக்கிறாள். அன்னையின் புன்முறுவல் பூத்த ஆறு திருமுகங்களும், பன்னிரெண்டு திருக்கரங்களும்  வேண்டி வரும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றன.

பாசம், அங்குசம், வில், சூலம், கதை, வரத முத்திரை, கேடயம், பாணம், அக்னி, மழுவோடு அபய முத்திரை தரித்து அருள் பாலிக்கிறாள். பளிச்சிடும் பதக்கங்கள், கழுத்து நிறைய ஆபரணங்கள், பாதங்களில் தண்டை, கொலுசு அணிந்து அழகை மொத்தமாகக் கொண்டிருக்கிறாள்.

ஒளியை அம்பிகையாக பார்க்கும் ஞானிகளுக்கும், யமனின் பாசக்கயிறில் பிரியும் போது அம்பிகையின் பேரொளியில் கலக்க விரும்பும் ஜீவனுக்கும்,  அருள் வழங்குகிறாள் நித்யா திதி நித்யா  தேவியானவள்.

மூலமந்திரம்:
ஓம் நித்யா பைரவ்யை வித்மஹே
நித்யா நித்யாயை தீமஹி
தன்னோ யோகிநி ப்ரசோதயாத்.

Sharing is caring!