தோஷமுள்ள உணவையா சாப்பிடுகிறீர்கள்….?

உண்ணும் உணவிலும் தோஷங்கள் உண்டு என்கிறது இந்துமதம். உயிரை காக்கும் உன்னதம் உணவுக்கே உண்டு. அதனால் தான்  உணவில் ஆசாரத்தைக் கடைப்பிடி என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். சமையலறை மகா லஷ்மியின் வசிப்பிடம். அது தூய்மையாக இருந்தால் தான் லஷ்மி வீட்டில் நிரந்தரமாக தங்குவாள்.செல்வம் கொழிக்கும். குடும்பத்தினர் ஆரோக்யமாக இருப்பார்கள் என்று வலியுறுத்தியது கூட இதனால்தான்.
உணவு எப்படி தயாரிக்கிறோம்… எங்கே தயாரிக்கிறோம்…. யாரால் தயாரிக் கிறோம் என்பது மிகவும் முக்கியமானது. உணவு உடலை மட்டுமல்ல உள் ளத்தையும் பாதுகாக்கிறது என்கிறது ஆயுர்வேதம். உணவில் ஐந்துவகையான் தோஷங்கள் உண்டு. அர்த்த தோஷம், நிமித்த தோஷம்,ஸ்தான தோஷம், ஜாதி தோஷம்,சம்ஸ்காரதோஷம்…

அர்த்த தோஷம்:  

அர்த்தம் என்றால் பொருள் என்று சொல்வார்கள்.  நீதி, நேர்மை தவறி அதர்மம் செய்து சம்பாதித்த பணத்தில் வாங்கப்படும் பொருள்களில் சமைக்கப்படும் உணவை சாப்பிட்டால்  சாப்பிட்டவர்களுக்கும் அர்த்த தோஷம் உண்டாகும்.

நிமித்த தோஷம்:

உணவை சமைப்பவர்கள் மனதில் அசுத்தத்தைக் கொண்டிருக்கக்  கூடாது. உடலும் மனமும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அவர்கள்  சமைத்த உணவை ஐந்துக்கள் முகர்ந்து பார்ப்பதோ… வாய் வைப்பதோ  கூடாது. உணவில்  தூசி,முடி, புழு போன்றவையும் இருக்க கூடாது. அப்படி இருந்தல் அது அசுத்தமான உணவு.

ஸ்தான தோஷம்:

உணவு சமைக்கும் இடம் மிகவும்முக்கியம். வாஸ்து முறையில் வீடு கட்டும் போது சமையலறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சமையலறையில் நல்ல அதிர்வுகள் சூழ்ந்திருக்க வேண்டும். வீட்டில் சண்டைக்களமாக மாறும் இடமாகவோ,  தேவையில்லாத பிரச்னைகளையும், சச்சரவுகளையும் ஏற்படுத் தும் இடமாகவோ  இருக்க கூடாது. அதே போன்று  சச்சரவு மிக்க இடங்களில் உள்ள உணவகங்களிலும் சாப்பிடக்கூடாது. அப்படி சமைக்கப்படும் உணவுகள் ஸ்தான தோஷத்தை உண்டாக்கிவிடும்.

ஜாதி தோஷம்:

இங்கு ஜாதி என்பது மனிதர்களை பிரித்து பார்ப்பதல்ல. உணவில் சாத்விக குணம், ராஜ சிக குணம், தாமஸ குணம் என்று மூன்று குணங்கள் உண்டு. பால், நெய், தயிர், அரிசி, மாவு போன்றவை சாத்விக குணம் படைத்தவை. இதை உண்டால்  ஆன்மிக பலத்தை அதிகரிக்க செய்யும்.

அதிக புளிப்பு, உப்பு, காரம் நிறைந்த உணவுகள் இராஜசிக குணம் பொருந்தியவை. இத்தகைய உணவு சுயநலத்தை அதிகரிக்க செய்வதாக இருக்கும். வெங்காயம், பூண்டு,  அசைவ உணவுகள் தாமஸ குணம் பொருந்தியவை. இது தீய எண் ணங்கள் நிறைந்த குணத்தை அதிகரிக்கும்.

சம்ஸ்கார தோஷம்:

சுத்தமாக  உணவுகள் தயாரிக்கப்பட்டாலும் சுவையிலும் குணத்திலும் வேறுபாடு இருக்க கூடாது. அதிகமாக வேக வைத்தல், வறுத்தல்,  நாட்கணக்கில் வைத்திருக்கும் உணவுகள் சம்ஸ்கார தோஷத்தை உண்டாக்கும்.

முன்னோர்கள்  உணவில் ஆசாரத்தைக் கடைப்பிடித்து எளிமையாக வாழ்ந்தார் கள். நாம் இந்த ஐந்து தோஷங்களையும் கலந்து கூடவே வெளியில்  ஒவ்வாத உணவுகளையும் உண்டு உடலையும் மனதையும் கடுமையான தோஷங்களுக்கு ஆளாக்கிவருகிறோம்.

Sharing is caring!