நன்மை பல தரும் புரட்டாதி சனி விரதம்

சனிபகவான் பிறந்த மாதம் புரட்டாசி மாதமாம். எனவே புரட்டாசி சனி கிழமைகளில் விரதமிருந்து ஏழைகளுக்கு முடிந்த உதவி செய்து அன்னதானம் செய்வதும், காகத்திற்கு ஆலிலையில் வெல்லம் கலந்த அன்னம் கொடுப்பதும் நல்லதாகும்.

புரட்டாசி (கன்னியா) மாதம் முதல் சனிகிழமையில் தான் கன்னிகா விருட்சம் தோன்றியது. இந்த தினத்தில் பிறந்த சனிபகவான் கிரகப்பதவியை அடைந்ததும் ஒவ்வொருவரையும் ஒரு குறிப்பிட்ட நாழிகை அல்லது வருடம் தன் ஆதிக்கத்திற்குக் கீழ் வரும்படி செய்வார்.

இது தான் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, கண்டச்சனி, பொங்கு சனி என்று பலவாறு சொல்லப்படுகிறது.

உண்மையில் சனிபகவான் மிகவும் நல்லவர். இவரின் பார்வையில் இருக்கும் பொழுது நீதி, நேர்மையுடன் நடந்தால் நல்லதே செய்வார் என சாஸ்திரங்கள் கூறுகின்றன.

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடித்து நவக்கிரகத் தொகுப்பிலிருக்கும் சனி பகவானுக்கு நீல மலர்கள் சாத்தி, எள் விளக்கு ஏற்றி வழிபட்டால் அன்புடன் நம் கோரிக்கையை ஏற்று நல்லது செய்வார்.

வழிபடும் முறை

புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருப்பவர்கள் அன்று அதிகாலையில் எழுந்து அன்றைய காலைக்கடன்களை முடித்துக் கொண்டு நீராடி, அவரவர்கள் குல வழக்கப்படி நெற்றியில் சமயச்சின்னத்தை- விபூதி, திருமண், சந்தனம், குங்குமம் இதில் ஏதாவது ஒன்றை இட்டுக்கொண்டு விநாயகப்பெருமானை வழிபட வேண்டும். பிறகு கருட தரிசனமும், ஆஞ்சநேயர் தரிசனமும் செய்தால் மிகவும் நல்லது.

Sharing is caring!