நலம்பெற சொல்ல வேண்டிய சுலோகங்கள்

உடலுக்கும் உள்ளத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஒன்று சரியில்லை என்றாலும் இன்னொன்றும் பாதிக்கப்படும். உடல் ,உள்ளம் நலம் பெற இந்த துதியை தினமும் பாராயணம் செய்தால் உபாதைகளிலிருந்து  விடுபட்டு நலம் பெறலாம்.

அச்யுதானந்த கோவிந்த நாமோச்சாரண பேஷஜாத்

நச்யந்தி ஸகலா ரோகா ஸத்யம் ஸத்யம் வதாம்யஹம்

ஆர்த்தா விஷண்ணா சிதிலாஸ்ச பீதா கோரேஷு ச வ்யாதிஷு வர்த்தமானா

ஸங்கீர்த்ய நாராயண ஸப்தமாத்ரம் விமுக்தது கா ஸுகினோ பவந்து.

பொருள்: அச்சுதா, அனந்தா, கோவிந்தா என்ற மகாவிஷ்ணுவின் நாமங்களை, உள்ளம் நெகிழ உச்சரிப்பவர்களுடைய அனைத்து வகை நோய்களும் விரைவில் அவர்களை விட்டு விலகும். மன நோய்களால் பீடிக்கப்பட்டவர்களும் துக்கத்தில் ஆழ்ந்தவர்களும் பய உணர்வு கொண்டவர்களும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களும் இவ்வாறு நாராயணனின் சங்கீதமான நாமங்களை இதயம் கசிந்து சொல்வார்களானால், தத்தமது உபாதைகளிலிருந்து அவர்கள் விடுபட்டு நலம் பெறுவார்கள்.

Sharing is caring!