நல்லது செய்தால் கெட்டது தானே விலகும்

மயிலம் என்னும் கிராமத்தில் பிள்ளையார் பக்தன் ஒருவன் இருந்தான்.    வேலை எதுவும் கிடைக்காததால்  ஏதாவது தொழில் செய்வோம் என்று அரசமர பிள்ளையாரை நாடினான். ”இன்று ஏதாவது  ஒரு வழி காண்பித்தால் தான் நான் செல்வேன் பிள்ளையாரப்பா…” என்று வணங்கியபடி… மர நிழலில் உட்கார்ந்தான். இவனுக்கும் பிள்ளையாருக்குமான பேச்சுவார்த்தை அமர்க்களப்படும்.  அதனா லேயே வேண்டும் போது கூட கண்களை மூடாமல் பிள்ளையாரைப் பார்த்த படியே  இருப்பான்.  பிள்ளையார் ஏதோ சொல்வது போலவே இருக்கும்.

ஒருவர்  மரத்தடியில் ஜோதிடம் சொல்லிக்கொண்டிருந்தார். வந்தவர் களும்  பயபக்தியோடு அவர் சொல்வதைக் கேட்டு தட்சணையும் வைத்துவிட்டு சென்றார்கள். சரி நாமும் ஜோதிடம் பார்ப்போமே  என்று நல்ல நாளில் பிள்ளை யாரை வணங்கி அரச மரத்தடியில் பட்டையும், விபூதியும் தரித்து உட்கார்ந்தான்.  பிள்ளையாரை வழிபட வந்தவர்கள் கண்களில் படும்படி  இருந்ததால்  பக்தர்கள் பிள்ளையாரை வழிபட்டு இவனையும் பார்த்தபடி சென்றார்கள்.

ஒரு வாரம் கடந்தது. ”என்னபிள்ளையாரே  எல்லோரும் உம்மை மட்டும் பார்க்க வருகிறார்களே கொஞ்சம் என் பக்கம் தள்ளிவிடக்கூடாதா” என்று  வேண் டினான். ”சரி இவன் என்ன தான் செய்கிறானோ பார்க்கலாம்” என்று எண்ணிய பிள்ளையார்  ஒரு தம்பதியரை   அவன் பால் திருப்பினார். அவர்கள் இவனி டம் வந்து “எங்களுக்குள் எப்போதும்  பிரச்னை வந்துகொண்டேயிருக்கிறது.    எங்கள் இருவரில் யார் ஜாதகத்தில் குறை  என்று பார்த்து சொல்லுங்கள்” என் றார்கள். இவனுக்குத்தான் ஜோதிடம்  பற்றிய ஞானமெல்லாம் கிடையாதே… இரு வரது ஜாதகத்தையும் ஆராய்ந்தான்.. பிள்ளையாரை வேண்டினான். கணக்கு  போடுவது போல் போட்டான்.. பிறகு மெதுவாக  அமைதியாக பேசினான்.

“உங்கள் இருவர் ஜாதகமும் அற்புத  ஜாதகம். நூறில்  ஒரு ஜோடிதான் இப்படி அமையும். இறைவன் விரும்பி  போட்ட முடிச்சு உங்களுடையது.  அதனால் ஜாதகப் பொருத்தத்தை விட இறைவன் உங்களுக்கு பொருத்தத்தை அற்புதமாக அளித்திருக்கிறான்.  முதலில் இருவரும் இணைந்து   வாரம் ஒருமுறை உங் கள் குலதெய்வ கோயிலுக்கோ. இஷ்ட தெய்வ கோயிலுக்கோ சென்று 11 முறை   பிரகாரத்தை வலம் வாருங்கள். அரை மணி நேரம் கோயிலில் அமர்ந்து இறை வனைத் தியானியுங்கள்.  இருவரும் இணைந்து அகல் தீபம் ஏற்றுங்கள்.. ஒரு மண்டலம் வரை இதைச் செய்து பிறகு வாருங்கள்… மறக்காமல்  இயன்றளவு அன்னதானமும், வயதானவர்களுக்கு ஆடை தானமும் செய்யுங்கள்” என்று கூறி அனுப்பினான்.

”சரியா சொன்னேனா பிள்ளையாரே” என்று  பிள்ளையாரைப் பார்த்த போது அவரது சிரிப்பில் தொந்தி குலுங்கியது. ”என்ன பிள்ளையாரே இப்பக்கூட நேரில் வரமாட்டியா”  என்று அழைத்தான். ”வந்தோம்” என்றபடி பிள்ளையார் அவன் அருகில் அமர்ந்தார். ”என்ன பக்தா..  ஜோதிடமெல்லாம் பார்க்கிறாய்.. பொய் ஜோதிடம் என்று தெரிந்தால் வெளுத்துவிடுவார்கள்” என்று சிரித்தார்… ”அது எப்படி பொய்யாக இருக்க முடியும். தான தர்மங்கள் செய்வதும், இறைவனை வணங்குவதும்   பிரச்னைகளிலிருந்து நமக்குத் தீர்வை உண்டாக்கும் என்னும் போது நான் சொன்ன பரிகாரங்கள் அவர்களைச் சேர்த்துதான் வைக்கும் அதோடு இருவரும் இறைப்பணி ஆற்றும்போது மனதில் அன்பும் கூடும்” என்றான். ”அதைப் பிறகு பார்க்கலாம். திருமணத்துக்கு பொருத்தம் பார்க்கவந்தால் என்ன செய்வாய்” என்று கேட்டார். ”அதைத் தான் நானும் யோசித்துக் கொண்டிருக் கிறேன்…நீயே ஆலோசனை சொல்லேன்” என்றான் பரிதாபமாக. ”நேரம் வரட் டும்” என்றார் பிள்ளையார்.

இப்படியே வருகிறவர்களுக்கெல்லாம் பரிகாரங்கள் சொல்லி அனுப்பினான். ஒரு மண்டலம் கழிந்து அந்த தம்பதியர் வந்தார்கள். ”ஐயா நீங்கள் சொன்னது உண்மை தான். இருவரும் இணைந்து இறைவனை வழிபட்ட பிறகு தான் எங்கள் பொருத் தத்தை உணர்ந்துகொண்டோம். இனி எங்களுக்குள் மறந்தும் பிரச்னைகள் வராது” என்று மகிச்சியோடு திரும்பினார்கள். பிறகு என்ன பரிகார ஜோதிடனாய் இறை வழிபாட்டையும், தான தர்மங்கள் செய்வதையும் மட்டும் சொல்லி பிரச்னை களைத் தீர்க்கும் பரிகார ஜோதிடனாய் புகழ்பெற்றான்.

அவனுக்குத்தான்  தொந்தி பிள்ளையார் உடன்  இருக்கிறாரே….  நல்லதை மட்டும் செய்து வந்தால்  கெட்டதும் தானாகவே விலகிடபோகிறது…

Sharing is caring!