நல்ல வரன் அமைய உச்சரிக்க வேண்டிய மந்திரம்

அதிசயமான வடிவுடை

யாள் அரவிந்த மெல்லாம்

துதிசய ஆனன சுந்தர

வல்லி துணை இரதி

பதிசய மானது அபசய

மாகமுன் பார்த்தவர்தம்

மதிசய மாகவன்றோவாம

பாகத்தை வவ்வியதே

பொருள் 

தேவி அபிராமி அன்பும் அருளும் பொங்கும் எழிலுடையவள். அத்தனைத் தாமரை மலர்களும் துதிக்கும் வெற்றி மிகும் முகத்தழகு சுடர்வீசும் கொடி போன்றவள்.அத்தகைய அம்பாள், ரதி தேவியின் மணாளனாகிய மன்மதனையே விழியால் எரித்த எம்பிரானின் மனத்தை விழியால் வெற்றி கொண்டுதான் இடபாகத்தில் அமர்ந்தருளினாள்.

Sharing is caring!