நவரசங்களும் கலந்த குறிப்புகள் …

ஆரோக்கியம் குறித்த கட்டுரைகளோடு அவ்வபோது கொஞ்சம் ஆரோக்ய குறிப்புகளையும் தெரிந்து கொள்ளவேண்டும். அவசர காலங்களில் நிச்சயம் கை கொடுக்கும்.

அன்றாடம் சமைக்கும் போது பச்சைமிளகாயைக் காரத்துக்கு சேர்ப்போம். பச்சை மிளகாய் அதிகம் உடலுக்கு சேர்வது நல்லதல்ல. அதோடு தற்போது ஹைப்ரேட் மிளகாய்கள் ஆதிக்கம் செலுத்துவதால் நல்ல காரமான உடலுக்கு ஆரோக்யம் தரக்கூடிய மிளகை காரத்துக்கு பயன்படுத்தலாம்.

எலுமிச்சை எல்லா வகையிலும் உடலுக்கு ஆற்றலைக் கொடுக்கும். உடலை சோர்வின்றி இயங்கவைக்கும். இயன்றவரை வாரம் இருமுறையாவது எலுமிச் சையை பிழிந்து உப்பு, நாட்டுச்சர்க்கரை சேர்த்து குடித்துவாருங்கள். உடலின் ஆரோக்யம் ஆரோக்யமாகவே இருக்கும்.

சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் எலும்பை பலப்படுத்த தேவையான கால்  சியம், புரதம் அதிகமுள்ள உணவுகளை அளிக்க வேண்டும். இயன்றவரை கீரைகள் குறிப்பாக முருங்கைக்கீரை, உலர் பழங்கள், பால், பருப்புகள் கலந்த உணவுகளை அதிகம் கொடுத்து பழக்குங்கள்.

காபி, டீ மட்டுமே அன்றாட பானமாக இல்லாமல் காலத்துக்கேற்ப சூப் வகைக ளையும், பழச்சாறுகளையும், காய்கறி சாறுகளையும் பயன்படுத்துங்கள். சத்துக் கஞ்சி, ஓட்ஸ் கஞ்சி, க்ரீன் டீ, சுக்கு காபி, பூண்டு பால் என்று தினம் ஒன்றாக மாறி மாறி பயன்படுத்தினால்  சத்துக்கள் சரிசமமாக கிடைக்கும்.

தினம் ஒரு சமையல் என்று அலுத்துக்கொள்ளாமல் காய்கறிகளையும் மாற்றி மாற்றி சமையுங்கள். நீர்ச்சத்துமிக்க காய்கறிகள், நார்ச்சத்துள்ள காய்கறிகள் என்று வகை வகையாக சமைக்க திட்டமிடுங்கள். உணவு உண்டபிறகு கண்டிப் பாக பழங்கள் என்பதைக் குடும்பத்தில் அனைவருக்கும் கட்டாயமாக்குங்கள்.

Sharing is caring!