நவராத்திரியின் ஒன்பது நாளும் புடவை அணியும் பெருமாள்!

நாடு முழுவதும் மகாவிஷ்ணுக்கு பல பெயர்களில் பல வடிவங்களில் கோவில்கள் உள்ளன. இந்த கோவில்கள் ஒவ்வொன்றிலும், சில அதிசயங்கள், ஆச்சர்யங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்ப்போம்.

திருப்பதி ஏழுமலைக்கு மேல் உள்ள நாராயணகிரியில், ஏழு மலையானின் பாதச்சுவடுகள் பதிந்துள்ளது ,..
திருச்சி  – முசிறி சாலையில் உள்ள வேதநாராயணன் கோவிலில், பெருமாள் அனைத்து வேதங்களையும், தலையணையாக வைத்துப் படுத்திருக்கிறார்.

இதனால் அவருக்கு வேதநாராயணன் என்று பெயர் கருங்குளத்தில், பெருமாளை மூன்று அடி உயரமுள்ள சந்தனக்கட்டை வடிவில் வைத்து, அபிஷேக ஆராதனை செய்து பூஜித்து வருகிறார்கள். இதற்கு இரண்டு பக்கமும் சங்கு, சக்கரம் இருக்கிறது.

திருக்கண்ணபுரத்தில் கண்ணபுரத்தான் பத்மாசனத்தில் ஸ்ரீதேவி, பூதேவி, பத்மினி, ஆண்டாள் என நான்கு தேவியருடன், சங்கு சக்கரம் தாங்கிக் காட்சியளிக்கிறார்.

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் உள்ள பெருமாளின் உற்சவத் திருமேனியில், மார்பில் சிவலிங்க அடையாளம் உள்ளது.

கர்நாடக மாநிலம் உடுப்பி கிருஷ்ணர், நவராத்திரியின் ஒன்பது நாளும், புடவை அணிந்து அருள்பாலிக்கிறார்.
ஆந்திராவில் பத்ராசலத்தில் ராமர் சங்கு, சக்கரத்துடன் காட்சியளிக்கிறார்.

சிவனைப்போல் முக்கண் உடைய பெருமாளைக் காண, சிங்கபெருமாள் கோவில் செல்ல வேண்டும். இங்குள்ள மூலவர் நரசிம்மமூர்த்திக்கு மூன்று கண்கள் உள்ளன.
காஞ்சிபுரத்தில் உள்ள விளக்கொளிப் பெருமாள் கோவிலில், பெருமாள் ஜோதி வடிவில் இருப்பதாக ஐதீகம். இங்கு கார்த்திகை தீபத்தன்று, பெருமாளுக்கு விளக்கேற்றி வழிபடுகிறார்கள்.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிகொண்ட பெருமாள் உள்ள தலம், திருமயம். ஒரே மலையைக் குடைந்தமைத்த சிவன், – திருமால் கோவில் இதுமட்டும்தான்.

மாமல்லபுரம் ஸ்தலசயனப் பெருமாள் கோவிலில் பெருமாள், ஒரு கரத்தை தலைக்கு வைத்துக் கொண்டு, தரையில் சாய்வாகக் கால் நீட்டி சயனம் கொண்டிருக்கிறார். சங்கு, சக்கரம் இல்லை.

Sharing is caring!