நவராத்திரியில் அம்பிகையை வழிபடும் முறை!

நவராத்திரியின் ஒன்பது நாட்களை, மூன்றாகப் பிரித்து, முதல் மூன்றுநாட்கள் துர்க்கையையும், அடுத்த மூன்று நாட்கள் திருமகளையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியையும், பத்தாம் நாள் விஜயதசமியன்று ஆதிபராசக்தியையும் பூஜை செய்வது நியதி.

ஒவ்வொரு நாளும், தேவியை ஒவ்வொரு வடிவத்தில் அலங்கரித்து வழிபடுவது சிறப்பு . மகேஸ்வரி, கவுமாரி, வராகி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, மகாசரஸ்வதி, நாரசிம்ஹி, சாமுண்டி ஆகிய வடிவங்களில் அம்பிகையை அலங்கரித்து தேவியை வழிபட வேண்டும்.

ஒன்பது நாளும் வழிபட முடியாதவர்கள் அஷ்டமி, நவமி, தசமி ஆகிய திதிகளில் அவசியம் வழிபடுவது நவராத்திரி விரத பலனைப் பெற எளிய வழியாகும்.

Sharing is caring!