நவராத்திரியில் சுண்டல் நிவேதனம் ஏன்?

நவராத்திரி என்றவுடனேயே எல்லாருக்கும் கொலுலும் சுண்டலும் தான் நினைவுக்கு வரும். நவராத்திரியின் ஒன்பது நாளும், தினமும் ஒரு சுண்டல் செய்து, அம்பிக்கைக்கு நிவேதனம் செய்வது சிறப்பு.  சுண்டல் நிவேதனத்தை அப்படி என்ன சிறப்பு. இதற்கு அறிவியல் காரணமும் உள்ளது.

 தேவர்களுக்கு சிவன், விஷ்ணு அமிர்தம் தந்து, அவர்களை காத்தது போல, பூமி உயிர்வாழ “மழை என்னும் அமிர்தத்தைத் தருகிறார்கள்.இதனால் பூமி “சக்தி பெறுகிறது. அந்த சக்தி எனும் பெண்ணுக்கு, பூமியில் விளைந்த விதவிதமான தானியங்கள் பக்குவப்படுத்தப்பட்டு, நிவேதனம் செய்யப்பட்டது. அதில் சுண்டல் பிரதான இடம் பெற்றது.

நவராத்திரி காலமான புரட்டாசி, ஐப்பசியில் அடைமழை ஏற்படும். இதனால் தோல் நோய் போன்றவை அதிகமாகும். இதைப் போக்கும் சக்தி சுண்டலுக்கு உண்டு.

இதை உணர்ந்து தான், நம் முன்னோர் நவராத்திரி நாட்களில், அம்பிகைக்கு சுண்டல் நிவேதனம் செய்ய சொல்லியுள்ளனர்.

Sharing is caring!