நவராத்திரி பூஜை பற்றிய விரிவான தகவல்கள்!

நவராத்திரியின் ஒன்பது நாட்களிலும், பூஜையில், பெண் குழந்தைகளை, தேவியாக பாவித்து பூஜை செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.

முதல் நாளில், அம்பிக்கைக்கு, மகேஸ்வரி என பெயர், இவர், மது, கைடபர் என்ற அசுரர்களை அழித்து, இந்த நாளில், இரண்டு வயது பெண் குழந்தையை பூஜை செய்து வழிபட வேண்டும்.

இரண்டாம் நாள், அம்பிகையின் வடிவம், ராஜராஜேஸ்வரி. இவள் தான் மகிஷாசுரனை வதம் செய்ய புறப்பட்டவள். 3 வயது பெண் குழந்தையை, கவுமாரி  வடிவமாக பூஜை செய்து வழிபட வேண்டும். இதனால், நோய் தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

மூன்றாம் நாள் : அம்பிகையை வாராஹியாக வழிபட வேண்டும். 4 வய சிறுமியை கல்யாணி வடிவமாக பூஜை செய்து வழிபட வேண்டும். இதனால், வீட்டில், நவதானியம் பெருகும்.

நான்காம் நாள் :  மஹாலட்சுமி வடிவமாக அம்பிகையை வழிபபட வேண்டும். ஐந்து வயது சிறுமிக்கு ரோகினி போல் வேடமிட்டு வழிபட வேண்டும். இதனால், கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள் : சும்ப நிசும்பர்களிடம் துாது சென்ற, மோகினியின் வடிவமாக அம்பிகையை வழிபட வேண்டும். 6 வயது சிறுமியை வைஷ்ணவியாக பூஜிக்க வேண்டும். இதனால், நினைத்த செல்வம் கிடைக்கும்.

Sharing is caring!