நவராத்திரி ஸ்பெஷல் டயட் உணவுகள்

இந்தியாவின் மிகப் பெரிய விழாக்களில் ஒன்று நவராத்திரி. ஒன்பது நாட்களுக்கு துர்கா தேவியின் ஒன்பது வெவ்வேறு அவதாரங்களை பக்தர்கள் வணங்குகிறார்கள். புனித பண்டிகையாக கொண்டாடப்படும் இந்த விழாவில் மக்கள் நோன்பு நோற்கிறார்கள். இந்த நோம்புகளால் உங்களது உடல் நலம் பாதிக்காமல் இருக்க எந்த விதமான பிரசாதங்களை செய்து உட்கொள்ளலாம் என்பதை பார்க்கலாம்.

கார்போஹைட்ரேட்டுகளால் நிறைந்துள்ளது ஜவ்வரிசி விரதத்தின் போது உங்களுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. ஜவ்வரிசி, உருளைக்கிழங்கு, வேர்க்கடலை மற்றும் சில லேசான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தி இந்த டிஷ் தயாரிக்கப்படுகிறது. நீங்கள் ஜவ்வரிசி கீர் அல்லது ஜவ்வரிசி கிச்சடியையும் செய்யலாம். 

வாழை வால்நட் லஸ்ஸி சுவை  நிறைந்த ஆரோக்கிய உணவாக இருக்கிறது. தயிர், வாழைப்பழங்கள், தேன் மற்றும் அக்ரூட் பருப்புகளைப் பயன்படுத்தி செய்யலாம். இந்த அற்புதம் மற்றும் ஆரோக்கியமான லாசியுடன் உங்கள் நாளை தொடங்கலாம்.

உருளைக்கிழங்கு அல்லது பன்னீர் தோசையில் நிரப்பலாம். இதனுடன்  புதினா மற்றும் தேங்காய் சட்னியை சேர்த்துக்கொள்ளலாம்.

Sharing is caring!